NPS திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்..! வரி சலுகை தாண்டி இப்படி ஒரு வசதி இருக்கு..!

தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் 60 வயதாகும் வரை இதில் செய்யப்படும் முதலீடுகளை திரும்ப பெற முடியாது. ஆனால் வாழ்க்கை எப்போதும் ஓய்வு பெறும் நேரம் வரை காத்திருக்காது. திடீரென அவசர செலவுகள், குழந்தைகளின் கல்வி அல்லது தொழில் தொடங்குதல் போன்ற தேவைகளுக்காக பணம் தேவைப்படலாம்.

என்பிஎஸ் திட்டம் என்றால் என்ன?: ஓய்வூதியத்திற்காக சேமிக்க விரும்புவர்களுக்கு பெரிதும் உதவும் திட்டமாக NPS இருந்து வருகிறது. ஏனெனில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப நம்முடைய செலவுகளும் அதிகரித்துவிட்டன எனவே ஓய்வுக்கு பிறகு மாதம் வருமானம் பெறுவதற்கு வேலையில் இருக்கும்போதே குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்க வேண்டும்.

NPS திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்..! வரி சலுகை தாண்டி இப்படி ஒரு வசதி இருக்கு..!

ஓய்வு காலத்தில் ஒருவருக்கு தேவையான வருமானத்தை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. என்பிஎஸ் திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று அதன் கூட்டு வருமானம். நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்கள் வருமானம் இருக்கும். அதோடு இளம் வயதிலேயே முதலீட்டைத் தொடங்குவது இன்னும் சிறந்தது.

NPS திட்டத்திற்கு பிற திட்டங்களை விட கடுமையான லாக்கின் காலம் இருந்தாலும்.. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சில நிபந்தனைகளின் கீழ் பகுதி அளவு பணம் எடுக்க அனுமதிக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய நீண்ட கால ஓய்வூதிய திட்டத்தை இது துளியும் பாதிக்காது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கி பங்களிப்பு செய்த உறுப்பினர்கள் தங்களுடைய பங்களிப்பில் 3 வருடங்கள் கழித்து 25 சதவீதம் வரை திரும்பப் பெற முடியும். ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனிநபர் பங்களித்த அசல் தொகை மட்டுமே எடுக்க தகுதிபெறும். அதே நேரம் உங்களுடைய முதலீட்டு வருமானம் அப்படியேதான் இருக்கும்.

இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். நீங்கள் உங்களுடைய என்பிஎஸ் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை பங்களித்திருக்கிறீர்கள். அதே நேரம் உங்கள் முதலாளியும் அதே தொகையை பங்களித்திருக்கிறார் என்றால்.. இரு பங்களிப்புகளின் வருமானமும் மொத்தம் ரூ. 2 லட்சம் இருக்கும். இதில் உங்களுடைய சொந்த பணமான ரூ.4 லட்சத்திலிருந்து 25 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும். அதாவது ரூ.4 லட்சம் முதலாளியின் பங்கு மற்றும் முதலீட்டிற்கான லாபம் ஆகியவை லாக்கின் காலம் வரை அப்படியே தான் இருக்கும். அதை எடுக்க முடியாது.

முதல் முறை பணம் எடுத்த பிறகு கூடுதல் பங்களிப்புகளின் அடிப்படையில் அடுத்தடுத்து பணம் எடுக்கலாம். ரூ.1 லட்சம் பணம் எடுத்த பிறகு.. நீங்கள் மேலும் ரூ. 2 லட்சம் பங்களித்தால் அந்த புதிய பங்களிப்பில் 25 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும். அதாவது ரூ.50,000. இரண்டாவது முறையாக இவ்வளவு தான் எடுக்க முடியும். இதே போல லாக்கின் காலம் முடியும் வரை 3 முறை பணம் எடுக்கலாம்.

எப்போது பணம் எடுக்கலாம்?: PFRDA அமைப்பு பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட வரம்புகளை அமைத்துள்ளது. குழந்தையின் உயர்கல்வி அல்லது திருமணம், வீடு வாங்குவது அல்லது கட்டுவது, புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் போன்ற தீவிர நோய்கள் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவின் போது பணம் எடுக்கலாம்.

நீங்களே படிக்க வேண்டும் அல்லது உங்கள் திறனை மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அல்லது உங்கள் தொழில் அல்லது ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் அப்போதும் உங்கள் பங்களிப்பில் இருந்து 25 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். ஒரே காரணத்தை பல முறை பணம் எடுக்க பயன்படுத்தலாம்.

அதுவே NPS டயர் 2 கணக்கு வைத்திருந்தால் பணம் எடுக்கும் செயல்முறை இன்னும் எளிது. இந்த கணக்குகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்கள் பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவோ திரும்ப பெற முடியும். ஆனால் டயர் 2 கணக்குகளில் பங்களிப்பு செய்பவர்களின் லாபத்திற்கு வரிச்சலுகைகள் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பணத்தை எவ்வாறு திரும்ப பெறுவது?: உங்களுடைய PRAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி என்பிஎஸ் கணக்கில் உள்நுழைய வேண்டும். அங்கு பணம் திரும்ப பெரும் பகுதிக்குச் சென்று உங்கள் கோரிக்கையை தொடங்கலாம். ஓடிபி அல்லது இ-சைன் மூலம் உங்கள் பெயர் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும். இதற்கு எந்தவித ஆவணங்களும் தேவையில்லை. திரும்ப பெறுவதற்கான நோக்கத்தை தெளிவாக வழங்க வேண்டும்.

60 வயதை அடைவதற்கு முன் NPS திட்டத்திலிருந்து வெளியேற முடியுமா?: 60 வயதை அடைவதற்கு முன் NPS திட்டத்திலிருந்து வெளியேற நினைத்தால் அதற்கு சில கட்டுப்பாடுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். முன்கூட்டியே வெளியேற வேண்டுமானாலும் அதற்கு 5 வருடங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்திருக்க வேண்டும். அப்போதும் கூட மொத்தக் கார்பஸில் 20 சதவீதம் மட்டுமே மொத்த தொகையாக எடுக்க முடியும்.

மீதமுள்ள 80 சதவீத தொகை தொகைக்கு ஒரு ஆனுயூட்டி பிளான் வாங்க பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை உங்களுடைய மொத்த பங்களிப்பும் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் முழு தொகையையும் எடுக்கலாம். இந்த விதிகளை புரிந்து கொள்வது என்பிஎஸ் திட்டத்தில் பணம் எடுப்பதை புத்திசாலித்தனமாக திட்டமிட உங்களுக்கு உதவும்.

NPS திட்டம் ஒரு சிறந்த நீண்ட கால முதலீட்டு திட்டம். இந்த திட்டத்தில் சேமிப்பது உங்கள் ஓய்வு காலத்தை பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் கழிக்க உதவும். அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு நம்பகமான திட்டம் தான் NPS .இதற்கு வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது. NPS வாத்சல்யா திட்டம் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். 2024-ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பில் இந்த திட்டம் வெளியானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+