இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தம்! C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களை தயாரிக்க திட்டம்!

லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனமும் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளது. இந்த கூட்டணியின் மூலம் , "C-130J சூப்பர் ஹெர்குலஸ்" போக்குவரத்து விமானத்தின் திறன்களை மேம்படுத்த உள்ளனர். இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை இன்னும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தியை விரிவாக்கும் நோக்கிலும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

C-130J சூப்பர் ஹெர்குலஸ்: C-130J சூப்பர் ஹெர்குலஸ் என்பது ஒரு நவீன போக்குவரத்து விமானமாகும். இது லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தம்! C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களை தயாரிக்க திட்டம்!

C-130J-30 சூப்பர் ஹெர்குலிஸ் 2011-ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை (IAF) உடன் சேவையில் உள்ளது, அதிக உயரம் மற்றும் கடுமையான காலநிலையில் செயல்படும் திறன்களை இந்த வகை விமானங்கள் கொண்டுள்ளன. இந்த விமானம் இயங்குதன்மை, செலவு மற்றும் எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது. உலகளவில், C-130J கடற்படை விமானங்கள் மொத்தம் 23 நாடுகளில் இயங்குகிறது.

C-130J விமானம் விமானப் படையினரின் உபகரணங்கள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுகிறது. பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது, C-130J விமானம் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுகிறது. இது மீட்கப்பட வேண்டிய மக்களை கண்டுபிடித்து, அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.

வான்வெளி தாக்குதல் நடந்தால் இந்த விமானத்தின் மூலம் ஏவுகணைகள், ஆயுதங்கள் என விமான படையினருக்கு தேவையான அனைத்தையும் கொண்டு செல்லவும் இந்த விமானங்கள் பயன்படுகிறது.

தற்போது போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இந்திய விமானப்படையின் 12 "C-130J விமானங்கள்" மற்றும் பிற உலகளாவிய சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கு பராமரிப்பு பழுதுபார்ப்பு மற்றும் பிற பகுதிகளை மாற்றியமைத்தல் ஆகிய வசதியை கொண்ட மையத்தை அமைப்பதற்காகவும் போடப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் 2 முக்கிய நோக்கம்:

பராமரிப்பு வசதி: இந்திய விமானப்படையின் (IAF) தற்போதைய 12 C-130Js கடற்படை மற்றும் சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களின் மற்ற உலகளாவிய கடற்படைகளுக்கு ஆதரவாக இந்தியாவில் ஒரு புதிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையம் அமைக்கப்படும்.

உற்பத்தி விரிவாக்கம்: இந்தியாவில் C-130J விமானத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களின் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+