ரியல் எஸ்டேட்டில் இவங்கதான் நம்பர் ஒன்.. லோதா டெவலப்பர்ஸிக்கு மகுடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பையை அடிப்படையாகக் கொண்ட லோதா டெவலர்ப்பர்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகச் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது.

அதுமட்டும் அல்ல GROHE Hurun India Real Estate Rich List 2019 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் லோதா டெவலப்பர்ஸின் எம்.பி லோதா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தான் தொடர்ந்து, இந்த பதிப்பின் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சிறந்த ரியல் எஸ்டேட் தொழில் முனைவோராகவும், அதிலும் 31,960 கோடி ரூபாய் சொத்துக்களுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட்டில் இவங்கதான் நம்பர் ஒன்.. லோதா டெவலப்பர்ஸிக்கு மகுடம்..!

இதையடுத்து டி.எல்.எஃப் நிறுவனத்தின் ராஜீவ் சிங் மற்றும் எம்பஸி குரூப் நிறுவனத்தின் தலைவர் ஜிஜேந்திர விர்வானி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் பணக்கார ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர் பட்டியல் 2019 என்ற பட்டியலை Hurun Report and GROHE India நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இது இதன் மூன்றாவது பதிப்பு என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று பதிப்புகளிலும் இரண்டு முறை லோதா குடும்பத்தினரே இந்த இடத்தினை பெற்றுள்ளனர்.

அதிலும் 2019ம் ஆண்டில் லோதா குடும்பத்தினரின் சொத்து 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற 99 நிறுவனங்கள் சொத்து மதிப்பு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் இரண்டாவது இடத்தில் உள்ள டி.எல்.எஃப் நிறுவனத்தின் ராஜீவ் சிங்கின் சொத்து மதிப்பு 25,080 கோடி ரூபாயாகவும், இவரின் சொத்து மதிப்பு 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 42 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்பஸி குரூப் நிறுவனத்தின் தலைவர் ஜிஜேந்திர விர்வானி 24,750 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். இதே ஹிரானந்தினி கம்யூனிட்டீஸ் குழுமத்தின் நிரஞ்சன் ஹிரானந்தினி 17,030 கோடி சொத்துகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இதே கே ராஹேஜாவின் சந்துரு ராஹேஜா அன்ட் ஃபேம்லி 15,480 கோடி ரூபாய் சொத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

இதில் முதல் பத்து இடங்களில் 6 பேர் உள்ளனர் என்றும், இதே 100 பேரில் 37 பேர் உள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lodha Developers is India's richest real estate entrepreneur in India

Lodha Developers is India's richest real estate entrepreneur in India. and Rajiv Singh of DLF is a Second place with a wealth of Rs.25,080 cr and third place in Jitendra Virwani of Embassy Property Developments.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X