நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் நான்காவது கட்டத் தேர்தல் மே 13 ஆம் தேதியன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடைபெற்றது. இதில் மொத்தம் 96 தொகுதிகளில் 1,717 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
அசோசியேஷன் ஆப் டெமகிராடிக் ரிபார்ம்ஸ் (ஏடிஆர்) அமைப்பின் ஆய்வில் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 1717 வேட்பாளர்களில் 1710 வேட்பாளர்களில் 476 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். 24 பேர் தங்களுக்கு சொத்துகளே இல்லை என்று கூறியுள்ளனர்.

வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
அதிக சொத்து கொண்ட வேட்பாளர்கள்: ஏடிஆரின்படி குன்டூர் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேச வேட்பாளர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசனிதான் டாப் பணக்காரர்.
அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி ஆகும்.
இரண்டாவது இடத்தில் தெலங்கானாவின் செவல்லா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.4,568 கோடி ஆகும்.
அதற்கடுத்ததாக ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசக்கட்சி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி வெமிரெட்டி உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.716 கோடி ஆகும்.
நான்காவது இடத்தில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அமிர்தா ராய் உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.554 கோடி ஆகும்.
ஐந்தாவது இடத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.எம்.ரமேஷ் உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.497 கோடி ஆகும்.
ஆறாவது இடத்தில் தெலங்கானாவின் செவல்லா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர டாக்டர் கட்டம் ரஞ்சித் ரெட்டி உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.435 கோடி ஆகும்.
குறைந்த சொத்து உள்ள வேட்பாளர்கள்: ஏடிஆரின்படி 24 வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்துகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. குறைந்த சொத்து மதிப்பை வெளியிட்டவர்களில் முதலாவதாக ஆந்திரப் பிரதேசத்தின் பபாட்டியா தனித் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தனக்கு வெறும் ரூ.7 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் மாயல் தொகுதியில் போட்டியிடும் பீம் சேனா வேட்பாளர் சந்தோஷ் உபாலே தன்னிடம் ரூ.83 மட்டுமே உள்ளதாகக் கூறியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவின் ஷிரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தன்னிடம் ரூ.90 மட்டுமே இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
நான்காவது இடத்தில் மகாராஷ்டிராவின் நந்தர்பார் பழங்குடி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஜலாம்சிங் சுதும் பவார் உள்ளார். அவர் தன்னிடம் ரூ.500 உள்ளதாகக் கூறியுள்ளார். அதேபோல் மகாராஷ்டிராவின் பீட் தொகுதியில் பிரபுத்தா ரிபப்ளிக் பார்ட்டி சார்பில் போட்டியிடும் ஷேஷேராவ் சக்கோபா வீர் தன்னிடம் ரூ.500 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

தவெக தலைவர் விஜய்-இன் பிரமாண பத்திரத்துல இந்த ரூ.100 கோடி விஷயத்த கவனிச்சீங்களா மக்களே..!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications