லண்டன்: பிரிட்டனை சேர்ந்து ஒரு மூதாட்டி 48 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தன்னுடைய கனவு வேலைக்காக அனுப்பிய கடிதம் என்னவானது என்பதற்கான விடையை தற்போது பெற்றுள்ளார்.
டிஸி ஹாட்ஸன் என்பவர் 70 வயதான மூதாட்டி. தற்போது இவர் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் 48 ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்காக விண்ணப்பம் செய்து அனுப்பிய கடிதம் தற்போது மீண்டும் இவரிடமே திரும்ப வந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடர் ஆக வேண்டும் என்பது சிறுவயதில் இவரது கனவாக இருந்திருக்கிறது. எனவே 1976 ஆம் ஆண்டு அவர் ஒரு நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் ரைடர் பணிக்கு விண்ணப்பம் செய்து ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
எப்படியாவது இந்த வேலை கிடைத்துவிடும் என அவர் நீண்ட நாள் இந்த கடிதத்திற்கு பதில் கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் தினமும் எதிர்பார்த்து காத்து இருந்து தன்னுடைய விண்ணப்ப கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதால் அவர் பிரிட்டனிலிருந்து வேறு நாட்டிற்கு குடி பெயர்ந்தார். ஆப்பிரிக்கா சென்ற அவர் அங்கே பாம்பு பிடிக்கும் வேலை மற்றும் ஏரோபிக் பைலட் என பல்வேறு பணிகளை மேற்கொண்டாராம்.
தற்போது மீண்டும் பிரிட்டனுக்கு அவர் திரும்பி விட்டார். இந்த நிலையில் அவர் 48 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அந்த விண்ணப்பக் கடிதம் மீண்டும் அவரிடம் திரும்ப வந்துள்ளது. 48 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய கடிதம் மீண்டும் தனக்கே கிடைத்திருப்பது சிறந்த உணர்வாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்த வேலைக்கு விண்ணப்பம் செய்து அதற்கு பதில் கிடைக்கவில்லையே என நீண்ட காலம் தான் காத்திருந்ததாகவும் தற்போது கூட ஏன் நமக்கு அந்த வேலை கிடைக்கவில்லை ஏன் நமக்கு பதில் கூட கிடைக்கவில்லை என அவர் தினமும் நினைத்து கொண்டு இருப்பாராம். தன்னுடைய கடிதமே அவர்களிடம் சென்று சேரவில்லை என்ற உண்மை அவருக்கு தெரிய வந்துள்ளது.
கடிதம் அஞ்சல் நிலையத்தில் இருந்த பெட்டியிலேயே சிக்கி கொண்டதாம். அண்மையில் தான் அதனை தபால் நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மீண்டும் அவருக்கே அந்த கடிதத்தை திரும்ப அனுப்பி உள்ளனர்.
இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த கடிதம் எனக்கு கிடைத்திருக்கிறது இத்தனை ஆண்டுகளில் நான் பல வீடுகளுக்கு மாறி விட்டேன் நான்கைந்து முறை நாட்டை நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறேன்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி இந்த கடிதம் என்னிடமே திரும்ப வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த காலகட்டத்தில் வேலை வேண்டி தான் கைப்பட எழுதிய இந்த கடிதம் பல்வேறு நினைவுகளை திரும்ப கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications