லண்டன்-ஐ சேர்ந்த மேன் குரூப் பிஎல்சி என்னும் நிறுவனம் துவங்கி 240 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளது.
மேன் குரூப் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 60 வயதான லூக் எல்லிஸ் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் 54 வயதான ராபின் க்ரூ செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் உலகின் மிகப் பெரிய ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் அமர்கிறார் என தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டில் மேன் குழுமத்தில் சேர்ந்தார் ராபின் க்ரூ. தற்போது இந்நிறுவனத்தின் அதன் தலைவராக உள்ளார். அமெரிக்காவில் இருந்து பணியாற்றி வரும் ராபின் க்ரூ, சிஇஓ பதவிக்காக பிரிட்டன் நாட்டுக்கு செல்ல உள்ளார். ஆனாலும் பெரும் பகுதி நேரம் அமெரிக்காவில் இருப்பார்.
2023 இன் இறுதியில் மேன் குரூப் பணியில் இருந்து ஓய்வுபெறும் ஜான் க்ரையனுக்குப் பதிலாக Anne Wade அதன் முதல் பெண் சேர்மேன் ஆக இந்நிறுவனம் நியமித்ததை தொடர்ந்து, தற்போது ராபின் க்ரூ சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனம் பிப்ரவரி மாதம் வந்தது, இதன் மூலம் சேர்மன் மற்றும் சிஇஓ ஆகிய இரு பதவிகளையும் பெண்கள் வகிக்க உள்ளனர்.
மார்ச் மாதத்தில் வெளியான Preqin இன் அறிக்கையின்படி, உலகளவில் ஆயிரக்கணக்கான ஹெட்ஜ் பண்ட் மற்றும் பிற முதலீட்டு நிறுவனங்கள் இருக்கும் வேளையில், இதில் 21.3% பேர் மட்டுமே பெண் ஊழியர்களாக உள்ளனர். இப்பிரிவு நிறுவனங்களில் வெறும் 13.6 சதவீதம் பேர் மட்டுமே உயர் பதவிகளில் உள்ளனர். பெண் நிர்வார குழு உறுப்பினர்களின் விகிதம் இன்னும் குறைவாக 10.3% சதவீதம் மட்டுமே உள்ளது.

மேன் குரூப் 1783 இல் ஜேம்ஸ் மேன் என்பவரால் லண்டனின் முக்கிய பகுதியான ஹார்ப் லேனில் ஒரு பேரல் தயாரிப்பாளர் மற்றும் தரகு நிறுவனமாக துவங்கப்பட்டது. இது லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அதன் தற்போதைய அலுவலகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் துவங்கப்பட்டது.
மேன் குரூப் துவங்கப்பட்டு சுமார் இரண்டு நூற்றாண்டுகளில் இந்நிறுவனம் பிரிட்டன் நாட்டின் ராயல் நேவி-க்கு ரம் சப்ளை செய்தது. இதோடு காபி மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை வர்த்தகம் செய்தது. கடந்த 40 வருடமாக தான் நிதி சேவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
2016ல் மேன் குரூப்-ன் சிஇஓ-வாக லூக் எல்லிஸ் பொறுப்பேற்ற பின்பு 81 பில்லியன் டாலராக இருந்த இந்நிறுவன சொத்து மதிப்பு 145 பில்லியன் டாலராக உயர்ந்தது. தற்போது ராபின் க்ரூ மேன் குரூப்-ன் சிஇஓ-வாக பதவியேற்றியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications