உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று லண்டனில் இருக்கும் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து தினசரி அடிப்படையில் நூற்றுக்கணக்கான விமானங்கள் வெவ்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. லண்டனில் உள்ள ஒரு மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இந்த விமான நிலையம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை மூடப்படவுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் தீ விபத்து ஏற்பட்ட மின் நிலையத்திலிருந்து தான் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போதைய இந்த மூடல் காரணமாக பல பயணிகள், பயண தாமதங்களை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது 120 விமானங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று அவை வேறு விமான நிலையங்களில் தரையிறங்கலாம் அல்லது அவை எந்த ஊரில் இருந்து கிளம்பியதோ அதே இடத்திற்கு திரும்பலாம் என கூறப்படுகிறது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மின்சாரம் எப்போதும் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று ஹீத்ரோ விமான நிலையத்தில் இருக்கும் செய்தி தொடர்பாளர் ஒருவர் ரைட்டர்சுக்கு மெயில் அனுப்பியுள்ளார். அடுத்த சில நாட்களில் இதன் காரணமாக பெரிய இடையூறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். "எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பை பராமரிக்கும் விதமாக மார்ச் 21ஆம் தேதி அன்று 23:59 மணி வரை ஹீத்ரோ மூடப்படும்", என்று விமான நிலையம் சார்பில் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தீ விபத்தின் காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று தரையிறங்க வேண்டிய 679 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல 678 விமானங்கள் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட இருந்தன. 1350-க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் ஹீட்ரோ விமான நிலையத்தின் மூலம் 2,20,000-த்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். சுமார் 90 விமான நிறுவனங்களுடன் உலக அளவில் 180-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பலர் பயணம் செய்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை வியட்நாம், இந்தியா, புருனே போன்ற இடங்களில் இருந்து விமானங்கள் வர இருந்தன. அதே நேரம் பயணிகள் டோக்கியோ, நியூயார்க் மற்றும் ரியாத் போன்ற இடங்களுக்கு புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட மின்தடை பல விமானங்களை திருப்பி அனுப்ப வழி வகுத்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications