உலகிலேயே செலவம் நிறைந்த ஆடம்பரமான நகரங்களில் துபாயும் ஒன்று. மில்லியனர்கள் தங்களது தொழிலை வளர்க்க மிகச் சிறந்த இடம். இருப்பினும் மிக்கி ஜக்தியானி தரைமட்டத்தில் இருந்து தொடங்கி தனது பில்லியன் டாலர் தொழில் சாம்ராஜ்ஜியமான லேண்ட்மார்க் குரூப்-ஐ உருவாக்கினார். துபாயில் வாழும் பெரும் பணக்கார இந்தியர்களுள் அவரும் ஒருவரானார்.
துபாயில் செல்வந்தர்களுள் ஒருவராகக் கருதப்படும் மிக்கி ஜக்தியானி ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப் பெரிய தொழிலை செய்து வந்தார். பெரும் செல்வந்தராக அறியப்பட்ட ஜக்தியானி தனது வாழ்க்கைப் பயணத்தை ஒரு டாக்ஸி டிரைவராகத் தொடங்கினார் என்பது பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாது.

துபாயில் உள்ள முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான மிக்கி ஜக்தியானி வாழ்க்கை முழுவதும் சொகுசாக வாழ்ந்ததில்லை. சிந்தி வகுப்பை சேர்ந்த ஜக்தியானி குவைத்தில் பிறந்தவர். இந்தத் தொழிலதிபர் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும் மும்பையிலும் படித்தார். பின்னர் மேல்படிப்புக்காக லண்டன் சென்றார்.
லண்டனில் பிஸினஸ் ஸ்கூலில் படித்த ஜக்தியானி படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். தனது செலவுகளை சமாளிப்பதற்காக அவர் டாக்ஸி ஓட்டினார். பல ஹோட்டல்களில் அறைகளை சுத்தம் செய்யும் வேலையை செய்தார்.
அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சோக சம்பவத்தின் காரணமாக பெற்றோரையும் சகோதரரையும் இழந்தார். இந்த நிலையில் அவரது குடும்பத் தொழிலை கவனிப்பதற்காக பஹ்ரைனுக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு அவரது சகோதரரின் கடையை எடுத்து அதில் குழந்தைகளுக்கான தயாரிப்புகளை விற்றார். குடும்பச் சொத்தாக அவருக்கு 6000 அமெரிக்க டாலர்கள் கிடைத்தன. இந்த நிலையில் அவர் தனது வியாபார நுணுக்கங்களை பயன்படுத்தி தனது கடையை விரிவு படுத்தினார். பத்தாண்டுகள் இப்படியே கழிந்தபோது அவருக்கு துபாயில் 6 கடைகள் இருந்தன.
துபாயில் மட்டும் கலக்கி வந்த Micky Jagtiani-ழ் லேண்ட்மார்க் குரூப் 1999 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குள் நுழைந்து லைப்ஸ்டைல், மேக்ஸ், ஹோம்சென்டர் என பல முன்னணி பிராண்டுகளை அறிமுகம் செய்து விரிவாக்கம் செய்தார்.
விரைவிலேயே தனது வியாபாரத்தை மிகப் பெரிய அளவில் மிக்கி உயர்த்தினார். 20 நாடுகளில் 6000 கடைகளை திறந்தார். துபாயில் கடைசியாக செட்டில் ஆனார். 2008 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றார். புத்திசாலித்தனமான முதலீடுகளால் மிக்கி ஒரு பில்லியனர் ஆனார்.
2023 மே மாதத்தில் மிக்கி ஜக்தியானி காலமானார். அவர் இறந்தபோது அவரது நிகர சொத்து மதிப்பு 5.2 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது இந்திய மதிப்பில் ரூ.43,194 கோடி ஆகும். இதனால் அவர் துபாயில் செட்டில் ஆன மிகப் பெரிய செல்வந்தர் ஆனார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications