சென்னை: ஆர்பிஐ விடுமுறை பட்டியலின்படி தான், இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்தின் 14ஆம் தேதிக்கு பிறகு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அடங்கும்.
ஜூன் 17, 2024 அன்று கொண்டாடப்படும் பக்ரித் பண்டிகையின்(Eid ul-Adha) விடுமுறை காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பக்ரீத் பண்டிகை என்பது இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த விடுமுறை நாளில் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக, பணம் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது, காசோலைகளை கிளியர் செய்வது போன்ற அனைத்து வங்கி சேவைகளும் கிடைக்காது.

ஜூன் 15, 2024: 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. ஆனால், ஐஸ்வால் மற்றும் புவனேஷ்வர் போன்ற சில இடங்களில் உள்ளூர் விடுமுறைகள் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 16, 2024: ஞாயிற்றுக் கிழமை, இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
ஜூன் 17, 2024: திங்கள்கிழமை, பக்ரீத் பண்டிகை காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஜூன் 18, 2024: செவ்வாய்கிழமை ஜம்மு, ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜூன் 22: நான்காவது சனிக்கிழமை, அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
ஜூன் 23: ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
ஜூன் 30: ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
பொதுவாக, இந்திய வங்கிகள் மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிறுகளிலும் மூடப்பட்டிருக்கும். ஜூன் 15, 2024 சனிக்கிழமை. மாதத்தின் 3வது சனிக்கிழமை என்பதால், நாட்டின் பெரும்பகுதிகளில் உள்ள வங்கிகள் இந்த நாளில் திறந்திருக்கும்.
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதல் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகள் ஜூன் 16 (ஞாயிறு), ஜூன் 17 மற்றும் ஜூன் 18 என மூன்று நாட்கள் மூடப்பட்டிருக்கும்.
வங்கி வாடிக்கையாளர்கள் அவசர தேவைகளுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். நீண்ட வங்கி விடுமுறையின் போது சிரமத்தைத் தவிர்க்க, ஜூன் 14க்குள் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை முடித்து, நிலுவை வைத்திருக்கும் வங்கி நடவடிக்கைகளை முடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
முன்பை விட தற்போது உள்ள மக்களுக்கு உள்ள பெரிய வசதி என்னவென்றால் ஆன்லைன் பேங்கிங். விடுமுறை நாட்களிலும் நீங்கள் எளிதில் வீட்டிலிருந்து பணப்பரிவர்த்தனை செய்வதற்கு இது உதவுகிறது. எனவே வங்கி விடுமுறைகள் பல பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், சிலர் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications