டெல்லி: 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் பல்வேறு நிதி அமைச்சர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் யார் மிக நீண்ட பட்ஜெட் உரையை வாசித்ததற்கான சாதனையை படைத்துள்ளார் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
தற்போது நிதி அமைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் தான் மிக நீண்ட பட்ஜெட் உரையை வாசிப்பதற்கான சாதனையை படைத்தவர். 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு தாக்கல் செய்தார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை தொடங்கி தொடர்ச்சியாக 1.40 மணி வரை வாசித்தார். இதுதான் இந்தியாவில் நீண்ட நேரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்ற பெயரை கொண்டுள்ளது.

தன்னுடைய முதல் பட்ஜெட் உரையிலும் நிர்மலா சீதாராமன் நீண்ட நேரம் வாசித்திருக்கிறார். 2019 - 2020 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை வாசித்தார். அதே வேளையில் குறைந்த பட்ஜெட் உரை வாசிப்பு என்ற சாதனையும் நிர்மலா சீதாராமனாலே படைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் 1.5 மணி நேரத்திலேயே பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார்.
2003 - 2004 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் 2 மணி நேரம் 13 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை வாசித்தார் .
2014 - 2015 ஆம் நிதி ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி 2 மணி நேரம் 10 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை வாசித்தார். அதிகபட்ச வார்த்தைகளை பயன்படுத்திய நிதி அமைச்சர் என்ற பெருமை மன்மோகன் சிங்கையே சாரும். 1991 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த அவர் 18,650 வார்த்தைகளை பேசினார்.
இதனை அடுத்து அருண் ஜெட்லி 2018 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது 18,604 வார்த்தைகளை பயன்படுத்தினார். அதே வேளையில் 1977 ஆம் ஆண்டு ஹிருபாய் பட்டேல் வெறும் 800 வார்த்தைகளிலேயே பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications