இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு தொழில் முனைவோர் தன்னுடைய தொழிலை 975 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்து விட்டு தற்போது வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக் கூறியிருப்பது பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
வினய் ஹையர்மேத் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தொழில் முனைவோர் . இவருடைய பெற்றோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் . இவர் லூம்(loom) என்ற ஒரு வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய இந்த நிறுவனத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான அட்லாசியான் விலை கொடுத்து வாங்கியது. 975 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8000 கோடி ரூபாய் ஆகும்.

இந்த நிலையில் வினய் வெளியிட்டுள்ள போஸ்ட்டில் ” என்னிடம் தற்போது நிறைய பணம் இருக்கிறது, ஆனால் வாழ்க்கையில் என்ன செய்வது என்பது குறித்து ஐடியா இல்லை” என பதிவு செய்துள்ளார்.
லூம் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வந்த இவர் ”என்னுடைய நிறுவனத்தை நான் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்து விட்டேன் . மீண்டும் வேலை செய்ய வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது.
ஆனால் வாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லை. ஏனெனில் பணம் சம்பாதிக்க வேண்டும், பதவி உயர்வு பெற வேண்டும் என எந்த ஆசைகளும் என்னிடம் இல்லை. என்னிடம் தற்போது எல்லையற்ற சுதந்திரம் இருக்கிறது ஆனால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நான் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
வினய் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக சென்றார். பின்னர் இரண்டு ஆண்டுகளிலேயே படிப்பை பாதியில் விட்டுவிட்டார். இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தில் நான்கு மாத காலம் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவில் இன்டர்ன்ஷிப் சென்றாராம். பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர் பேக்பிளேன் என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
அங்கே பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொண்ட அவர் சாகித் கான் என்ற நண்பரோடு இணைந்து 2015 ஆம் ஆண்டு லூம் என்ற வீடியோ அடிப்படையிலான ஒரு செயலியை உருவாக்கினார்.
லூம் என்பது எளிதான ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யக்கூடிய ஒரு செயலியாகும். லூம் செயலியை 25 மில்லியன் பயனர்களும், 4 லட்சம் நிறுவனங்களும் பயன்படுத்துவதாக தெரிகிறது. 2023 ஆம் ஆண்டில் லூமை ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான அட்லாசியான் வாங்கிவிட்டது.
இதனிடையே பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று அறியாமல் இருப்பதாக வினய் வெளியிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது. மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தலாம், கிராம புற பகுதிகளுக்கு சென்று அங்கே முன்னேற துடிக்கும் நபர்களுக்கு உதவுங்கள், சுற்றுசூழலை பாதுகாக்கும் திட்டங்களுக்கு உதவி செய்யுங்கள், நல்ல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள் என பலரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications