ரயிலில் பயணம் செய்யும் போது நீங்கள் எப்போதாவது உங்கள் பொருட்களையோ அல்லது லக்கேஜ்களையோ இழந்திருக்கிறீர்களா? ரயில் பயணம் செய்யும் போது, இது போன்ற விஷயங்கள் நடப்பது பொதுவானது தான். இவ்வளவு பெரிய ரயில் நெட்வொர்க் மூலம் இழந்த பொருட்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று பலருக்கும் தோன்றலாம். அனால், ரயில் பயணத்தின் போது, நீங்கள் இழந்த பொருட்களை திரும்பப் பெறுவதற்கான வசதியை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அதன் விவரங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பயணிகளின் தொலைந்த பொருள்களை எளிதாகக் கண்டறியும் வகையில், இந்திய ரயில்வேயின் வெஸ்டர்ன் டிவிசன் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. "ஆபரேஷன் அமானத்" திட்டத்தின் கீழ், ரயில்வே பாதுகாப்பு படை (RPF) பயணிகளின் தொலைந்த பொருட்களை புகைப்படம் எடுத்து அவை இருக்கும் டிவிசன்களுக்கு சமர்ப்பிக்கின்றனர். மும்பை சென்ட்ரல், வதோதரா, அஹமதாபாத், ரத்லாம், ராஜ்கோட் மற்றும் பவநகர் உட்பட பல்வேறு டிவிசன்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே இந்த அம்சத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.

இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கான ஸ்டெப்ஸ்: உங்கள் இழந்த பொருட்களை மீட்டெடுக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 1: http://wr.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உங்கள் துணைப்பிரிவிற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: தொலைந்த பொருட்களின் அனைத்து விவரங்களையும் அந்த பிரிவிற்குள் ஆன்லைனில் காணலாம். உங்கள் லக்கேஜ் தொலைந்து போன தேதி, யார் சமர்பித்தார்கள், மதிப்பிடப்பட்ட மதிப்பு மற்றும் பொருள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டதா போன்றவவை இதில் காண்பிக்கப்படும்.
இந்த வசதி மேற்கு டிவிசனில் இருக்கும் பயணிகளுக்கும் உதவிகரமானதாக
இருக்கும். இந்தச் சேவையின் மூலம், பெரிய சிரமத்திற்கு ஆளாகாமல், உங்கள் இழந்த சாமான்களை திறமையாக மீட்டெடுக்க முடியும்.
மேற்கு ரயில்வே இணையதளத்தைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், நீங்கள் பயணம் செய்த ரயில்வே நிலையத்தில் உள்ள RPF அலுவலகத்தில் தொலைந்து போன பொருட்களை பற்றி புகார் அளிக்கலாம். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் பொருட்களை தொலைப்பதைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உங்கள் லாக்கேஜ்களில் லேபிள் ஒட்டி வைப்பது நல்லது.
சமீப காலமாக ரயில் மட்டுமன்றி விமானங்களிலும் லக்கேஜ் தவற விடப்படுவது நடந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் வெளியான ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இதுபோன்ற இணையதளங்களை விமான நிறுவனங்களும் கொண்டுவந்து பயணிகளுக்கு உதவினால் லக்கேஜ்ஜுகள் காணாமல் போவதை பெருவாரியாக தடுக்க முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications