சென்னை: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாத நபர்களே இல்லை. அவற்றில் வங்கி விவரங்கள், புகைப்படங்கள், தனிப்பட்ட தகவல்கள் என பல்வேறு முக்கிய டேட்டாக்களை வைத்திருக்கின்றனர். எதிர்பாராத விதமாக உங்கள் ஆண்ட்ராய்டு போனை நீங்கள் தொலைத்துவிட்டால் அல்லது திருடபட்டுவிட்டால், உங்கள் டேட்டா தவறான நபர்களின் கைகளுக்குச் செல்லாமல் இருக்க விரைவாகச் செயல்பட வேண்டியது அவசியம். போன் காணாமல் போனால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறது இந்த பதிவு.
உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஃபோனைப் பாதுகாப்பான முறையில் கண்டறியவும், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்களை அழிக்கவும் உதவும் சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

"Find My Device" அம்சத்தைப் பயன்படுத்துங்கள்: உங்கள் ஆண்ட்ராய்டு போனில் "Find My Device" என்ற அம்சம் முன்பே ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்கள் தொலைபேசியைக் கண்டறிந்து, லாக் செய்து விடலாம் அல்லது அதன் டேட்டாக்களை முழுவதுமாக அளித்து விடலாம்.
எவ்வாறு உங்களுடைய மொபைலில் "Find My Device" ஆன் செய்து வைப்பது என்று பார்ப்போம்.
ஸ்டெப் 1: உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் "Settings"-ஐ திறக்கவும்.
ஸ்டெப் 2: "Google" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: தற்போது "Find My Device" ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
உங்கள் போனைக் கண்டறிய, நீங்கள் மற்றொரு Android சாதனத்தையும் பயன்படுத்தலாம். google.com/android/find என்ற இணையதளத்திற்கு செல்லவும். தொலைந்த போனுடன் தொடர்புடைய உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். இதன் கீழ், உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களையும் காண்பீர்கள்.
இதை பயன்படுத்தி உங்கள் தொலைந்த போன் எங்கு உள்ளது என்பதை ட்ராக் செய்ய முடியும். ஆனால் இன்டர்நெட் ஆனில் இருக்கும் வரை மட்டுமே உங்களால் இதை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சாதனம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால், அது கடைசியாக இருந்த இடத்தைக் காண்பிக்கும்.
உங்களால் ஃபோனைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் இதைப் பயன்படுத்தி கண்டுபிடித்துவிடலாம். யாரேனும் அருகில் உள்ளவர்கள் உங்கள் போனை திருடியது போல் உணர்ந்தால் நீங்கள் "Play Sound" என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் ஃபோனில் ரிங் அடிக்கும். இதை வைத்து எளிதாக, உங்கள் போன் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்கலாம்.
உங்கள் ஃபோன் திருடப்பட்டதாக நீங்கள் நம்பினால், பின், பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் மூலம் அதை தொலைவிலிருந்து லாக் செய்யலாம். இந்த நடவடிக்கை உங்கள் ஸ்மார்ட்போனை ஆள் பேர் தெரியாதவர்கள் திறந்து பார்பதைத் தடுக்கும். மேலும், உங்கள் மொபைலில் உள்ள எல்லா டேட்டாவையும் அழிக்கலாம். இருப்பினும், இதுபோன்ற செயல்முறையை செய்வதால், உங்கள் ஸ்மார்ட்போனை திரும்பப் பெற்றாலும் டேட்டாக்களை மீட்டெடுக்க முடியாது. உங்கள் மொபைலில் உள்ள டேட்டா நிரந்தரமாக அழிந்துவிடும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications