இன்றைய டிஜிட்டல் உலகில் UPI பணப் பரிவர்த்தனைகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் ஸ்மார்ட் போனில் ஒரு சில கிளிக்குகளின் மூலம் எளிதாக பணத்தை அனுப்பலாம், பணத்தை பெறலாம், ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தற்போது மக்கள் வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்வது வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு.
தேவைப்படும் நேரங்களில் ATM கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பது, பணத்தை டெபாசிட் செய்வது என வங்கி சேவைகளை பெரும்பாலும் ஏடிஎம்களிலேயே முடித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.

உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
கார்டை பிளாக் செய்யவும்: உங்கள் ATM கார்டு தொலைந்து போனதை நீங்கள் கண்டறிந்தால் முதலில் செய்ய வேண்டியது அதை பிளாக் செய்வதுதான் அல்லது டி-ஆக்டிவேட் செய்துவிடலாம். உங்கள் ATM கார்டைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடப்பதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.
எவ்வாறு ஏடிஎம் கார்டை பிளாக் செய்வது?:
ஆன்லைன்: உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் போர்ட்டல் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் ATM கார்டை பிளாக் செய்யலாம். மொபைல் அப்ளிகேஷன் அல்லது போர்ட்டலில் உள் நுழைந்து "ஏடிஎம் கார்டு பிளாக்" என்று பெயரிடப்பட்ட ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் கார்டை பிளாக் செய்யலாம். இதனை நீங்கள் ஒரு சில நிமிடங்களில் செய்துவிடலாம். மேலும் விரைவாக நடவடிக்கை எடுக்க இந்த ஆன்லைன் தளங்கள் உங்களுக்கு உதவும்.
வங்கிக்குச் செல்லலாம்: ஒருவேளை உங்களுக்கு ஆன்லைனில் பிளாக் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் வங்கிக்கு தெரிவிக்கலாம். உங்களுடைய மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்து கொள்ளலாம்.
தொலைபேசி அழைப்பு: நீங்கள் வெகு தூரத்தில் இருந்து உங்கள் வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் வங்கியின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து நடந்தவற்றைக் கூறி உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய சொல்லலாம்.
கார்டை அன் பிளாக் செய்தல்: பின்னர் உங்கள் ATM கார்டை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு வங்கி கிளைக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு உங்கள் அடையாளத்தையும், கார்டின் உரிமையையும் சரிபார்க்க கோரிக்கை படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். சில வங்கிகள் இந்த ஆப்ஷனை ஆன்லைன் பேங்கிங் தளங்கள் மூலமாகவே வழங்குகின்றன. ஆனால் இது ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப மாறுபடும். ஏடிஎம் கார்டுகள் தொலைந்து விட்டால் விரைவாக செயல்படுவதன் மூலம் உங்களுடைய நிதியை பாதுகாக்கலாம் மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காமல் தடுக்கலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications