பல வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்களை சேமித்து வைக்க லாக்கர் வசதிகளை வழங்குகின்றன. லாக்கரின் அளவைப் பொறுத்து வங்கிகள் அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன. வங்கி ஒரு சாவியை உரிமையாளரிடம் வழங்கிவிட்டு மற்றொரு சாவியை வைத்திருக்கும். இரண்டு சாவிகளும் இருந்தால் மட்டுமே ஒரு லாக்கர் திறக்கப்படும். ஆனால் எதிர்பாராத விதமாக உங்களுடைய லாக்கர் சாவி தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சில சமயங்களில் உங்களுடைய சாவி தொலைந்து போகலாம் அல்லது திருடப்படலாம். அதற்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய லாக்கர் சாவி தொலைந்து போனால் வங்கி புதிய சாவியை வழங்கும். உங்களுடைய சாவி தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் விலை உயர்ந்த நகைகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை வங்கி லாக்கரில் வைத்திருப்பதால், முதலில் வங்கி லாக்கரின் சாவி தொலைந்து போனது குறித்து வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்பின் லாக்கர் சாவி தொலைந்தது குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும். லாக்கர் எண் தொடர்பான அனைத்து விவரங்களையும் கொண்ட விண்ணப்பத்தை வங்கிக்கு வழங்க வேண்டும். இதனுடன், போலீஸ் அறிக்கையின் ரசீது அல்லது பதிவு செய்யப்பட்ட FIR-இன் நகலை, அந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதன் பிறகு வங்கி உங்களிடம் புதிய லாக்கருக்கான கட்டணத்தை வசூலிக்கும், மேலும் லாக்கர் வாடகைதாரர் புதிய சாவியை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் கூறும் சரியான நேரத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் லாக்கரில் டூப்ளிகேட் சாவியை பயன்படுத்துவதன் மூலம் சில சமயம் சாவி சேதம் அடைந்து திறக்க முடியாமல் போகலாம். அதனால் வாடிக்கையாளகளின் விருப்பத்தின் கீழ் முதல் லாக்கரை உடைத்து அனைத்து பொருட்களையும் புதிய லாக்கருக்கு மாற்ற வேண்டும்.
இதுபோன்ற நேரங்களில் செயல்முறையின் முழு செலவையும் வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். லாக்கரை உடைப்பதற்கு மற்றும் தொலைத்த சாவியை மாற்றுவதற்கு கூடுதலாக ரூ. 1000 வாடகைதாரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் ஒவ்வொரு வங்கியை பொறுத்து மாறுபடும்.
எனவே, லாக்கர் சாவியை தொலைத்துவிட்டால், உடனடியாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தொலைந்த சாவி, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதிமொழியும் வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications