வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் ஒரு சேவை தான் லாக்கர் சேவை. வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தங்களின் விலை மதிப்பு மிக்க பொருட்களை வைத்துக் கொள்வதற்காக லாக்கர் வசதியை வழங்குகிறது. லாக்கரின் அளவு, உங்கள் பொருட்களை சேமித்து வைப்பதற்கான காலம் ஆகியவற்றைப் பொறுத்து இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொதுவாக இது போன்ற லாக்கர்களுக்கு 2 சாவிகள் இருக்கும். ஒன்றை வங்கிகள் வைத்திருக்கும். மற்றொன்று வாடிக்கையாளரிடம் கொடுக்கப்படும். இந்த லாக்கர் சாவியை எதிர்பாராத விதமாக தொலைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இன்றெல்லாம் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இதன் காரணமாக பல வாடிக்கையாளர்களும் தங்களுடைய நகைகள், முக்கியமான பத்திரங்கள் போன்றவற்றை லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கின்றனர். மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாத்து வைக்க லாக்கர்கள் சிறந்த வழியாகும்.
லாக்கரை ஒரு நபர் வாடகைக்கு எடுக்கும் போது வங்கிகள் அவரிடம் ஒரு சாவியை கொடுக்கும். இந்தச் சாவியை பயன்படுத்தி வாடிக்கையாளர் தேவைப்படும் நேரங்களில் லாக்கரைத் திறக்க முடியும். ஆனால் இதற்கும் வரம்புகள் உண்டு. இது வெவ்வேறு வங்கிகளை பொறுத்து மாறுபடலாம். வரம்பை மீறி நீங்கள் லாக்கரைத் திறக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல எதிர்பாராத விதமாக சாவி தொலைந்து விட்டால் வாடிக்கையாளர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
FIR பதிவு செய்தல்: உங்கள் லாக்கர் சாவி தொலைந்து விட்டால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். இதனுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் ஒரு புதிய லாக்கர் சாவி பெறுவதற்கு எஃப்ஐஆர் அவசியமாகும்.
லாக்கரை திறப்பதற்கான ஆப்ஷன்கள்: சாவி தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் சாவியை வைத்து லாக்கர் திறக்கப்படும். ஒரு வேலை இந்த நடைமுறை இல்லாத பட்சத்தில் வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் லாக்கரை உடைக்கும் செயல்முறையை வங்கிகள் தொடங்கும். அதன் பின் லாக்கரில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் இன்னொரு லாக்கருக்கு மாற்றப்பட்டு வாடிக்கையாளருக்கு புதிய சாவி வழங்கப்படும். இதற்கான அனைத்து செலவையும் வாடிக்கையாளர் ஏற்க வேண்டும்.
லாக்கர் உடைக்கப்படுவதற்கான விதிகள்: லாக்கரை உடைக்கும் போது வாடிக்கையாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் என இருதரப்பினரும் இருக்க வேண்டும். லாக்கர் கூட்டுக்கணக்காக இருந்தால், அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களும் இருக்க வேண்டியது கட்டாயம்.
ஒருவேளை வாடிக்கையாளர் வர முடியாவிட்டால், அவர் எழுத்துப்பூர்வமாக அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பிற வங்கிகளின் கொள்கையின் படி வாடிக்கையாளர் லாக்கரின் வாடகையை 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செலுத்தவில்லை என்றால் நிலுவைத் தொகையை பெற வங்கிகள், லாக்கரை உடைக்கலாம். இதே போல் 7 ஆண்டுகள் லாக்கர் செயல்படாமல் இருந்து வாடிக்கையாளரும் வங்கிகளுக்கு வரவில்லை என்றால் வாடகை செலுத்தப்பட்டாலும், செலுத்தாவிட்டாலும் அதை திறக்க வங்கிக்கு உரிமையுண்டு.
ஒருவேளை ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் மேல் கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பது போல வங்கிகள் மற்றும் காவல் துறையினர் சந்தேகித்தால், வாடிக்கையாளர் இல்லாமலும் லாக்கரை உடைப்பதற்கான உரிமை உண்டு. வாடிக்கையாளர் தங்கள் சாவியை தொலைத்து விட்டால் வங்கியின் விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications