சிம் கார்டு தொலைந்து விட்டதா? வருமான வரி தாக்கல் செய்ய முடியவில்லையா? இ-ஃபைலிங் போர்ட்டலில் நுழைய ஈஸி வழி!

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 வரை டெட்லைன் வழங்கப்பட்டுள்ளது. எனவே வரி தாக்கல் செய்வோர் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருப்பீர்கள். அதற்கு கண்டிப்பாக வருமானவரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் தேவை. அப்போதுதான் அதில் ஓடிபி பெற முடியும். ஆனால் உங்களிடம் தற்காலிகமாக மொபைல் நம்பர் இல்லை என்றாலும் லாகின் செய்வதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் சில ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும்போது இருந்த மொபைல் நம்பர் இல்லாமலும் பாஸ்வேர்டை அப்டேட் செய்து கொள்ளலாம்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் நெட் பேங்கிங், ஈமெயில் மற்றும் வேறு சில வழிகள் மூலம் மொபைல் நம்பர் இல்லாமலும் உங்களுடைய அக்கவுண்டில் உள்நுழைய ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 2026-27-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தத் திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் தங்கள் மொபைல் நம்பரை மாற்றி இருந்தாலும் சரி.. தற்காலிகமாக அந்த நம்பர் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் சரி எளிதில் இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழையலாம்.

எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தலாம்?: மொபைல் நம்பர் இல்லை என்றால் ஆதார் ஓடிபி, இ ஃபைலிங் ஓடிபி, பேங்க் அக்கவுண்ட் எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோட், டிமேட் அக்கவுண்ட் எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோட், டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட், நெட் பேங்கிங் போன்ற ஆறு வழிகளின் மூலமாக பாஸ்வேர்டை அப்டேட் செய்யலாம்.

சிம் கார்டு தொலைந்து விட்டதா? வருமான வரி தாக்கல் செய்ய முடியவில்லையா? இ-ஃபைலிங் போர்ட்டலில் நுழைய ஈஸி வழி!

டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட்: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் இல்லாத பட்சத்தில் நீங்கள் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட்டை பயன்படுத்தி பாஸ்வேர்டை அப்டேட் செய்யலாம். இந்த டிஜிட்டல் சிக்னேச்சர்-ஐ ஏற்கனவே பதிவு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த முறையைப் பயன்படுத்தி நீங்கள் பாஸ்வேர்டை அப்டேட் செய்தால் அதற்கு முன்னரே பான் கார்டுடன் உங்களுடைய டிஜிட்டல் சிக்னேச்சரை இணைத்திருக்க வேண்டும்.

Also Read

நெட் பேங்கிங்: உங்களுடைய பான் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு "e-Filing Vault Higher Security" என்ற சேவையின் கீழ் நீங்கள் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்தால் உங்கள் வங்கி மூலமாகவே வருமான வரி இணையதளத்தை பயன்படுத்த முடியும். அதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ நெட் பேங்கிங் போர்ட்டல் மூலம் லாகின் செய்து அங்கிருந்து அப்படியே வருமான வரி இ-ஃபைலிங் இணையதளத்திற்குச் செல்லலாம்.நெட் பேங்கிங் மூலமாக ப்ரொபைல் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம்.

ஈ-மெயில்: டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் மற்றும் நெட் பேங்கிங் ஆகிய இரண்டு வசதியையும் பயன்படுத்த முடியாதவர்கள் ஈ-மெயில் மூலமாக பாஸ்வேர்டை மாற்றியமைக்கலாம். அதற்கு "[email protected]" என்ற அதிகாரப்பூர்வ மெயில் ஐடியை பயன்படுத்த வேண்டும். பின்னர் அந்த மெயில் ஐடிக்கு பான் கார்டு, ஆதார் கார்டு ஓட்டர் ஐடி, லைசென்ஸ் மற்றும் போட்டோ உடன் கூடிய வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றை செல்ப் அட்டஸ்டேஷன் செய்து அனுப்ப வேண்டும். அதோடு ஏன் பாஸ்வேர்டை மாற்றுகிறீர்கள் என்ற காரணத்தையும் குறிப்பிட்டு மெயில் அனுப்ப வேண்டும்.

ஆனால் மெயில் அனுப்பும் போது நீங்கள் இ-ஃபைலிங் இணையதளத்தில் எந்த மெயில் ஐடியை பதிவு செய்தீர்களோ? அந்த மெயில் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும். டாக்குமெண்ட் அனைத்தும் ZIP ஃபார்மெட்டில் இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+