இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதும் அனைவருக்கும் தெரியும், ஆனால் இந்தச் சரிவில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் நிதியுதவி அளித்திருந்தாலும், இந்தியா தான் மிகப்பெரிய உதவிகளைச் செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இந்தச் சரிவில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் நிதியுதவி அளித்திருந்தாலும், இந்தியா தான் மிகப்பெரிய உதவிகளைச் செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு
இலங்கை அரசு இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு அறிவித்துள்ள முக்கியச் சுற்றுலா பேகேஜ்-கள், பயணிகளுக்கு அளிக்கும் இன்சூரன்ஸ்-ல் தள்ளுபடி ஆகியவை முக்கியமானதாகக் கருதுகிறது என இலங்கை சுற்றுலா மற்றும் நிலம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது இந்திய பயணத்தில் தெரிவித்துள்ளார்.
தவறான மற்றும் பொய்யான தகவல்கள்
இலங்கை குறித்துப் பல தவறான மற்றும் பொய்யான தகவல்கள் வளம் வருகிறது, இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை, ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவி மூலம் எங்களுடைய கடனை விரைவில் தீர்க்க உள்ளோம்.
உணவு, எரிபொருள், மின்சாரம்
இதேபோல் இலங்கையில் உணவு இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை என்பது போன்ற தகவல்கள் பொய்யானவை. தற்போது இலங்கையில் ஒரு மணிநேர மின்வெட்டு மட்டுமே உள்ளது, இதுவும் ஹோட்டல் போன்ற இடத்தில் ஜெனரேட்டர் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் எரிபொருள் தட்டுப்பாடும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஹரின் பெர்னாண்டோ
இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத் துறையை அதிகம் நம்பியிருக்கும் வேளையில் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதேபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளை லண்டன் மற்றும் பிரிட்டன் நாட்டின் பிற முக்கியப் பகுதிகளிலும் செய்யத் திட்டமிட்டு உள்ளார்.
டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டம்
தற்போது இலங்கை அரசுடன் இணைந்து தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்த இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்ரீ லங்கன் ஏர்லையன்ஸ், மேக் மை டிரிப், மாஸ்டர்கார்டு ஆகியவை இணைந்து செயல்படுகிறது. இதேபோல் பல பிரபலங்கள், இசை அமைப்பாளர்களை டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications