சமீபத்தில் பெரும் பணக்காரர்கள், நிறுவன தலைவர்களின் பிரைவேட் ஜெட்-கள் எங்கு இருக்கிறது, எங்கு செல்கிறது, எப்போது கிளம்புகிறது, எப்போது தரையிறக்கப்படுகிறது உட்பட ரியல் டைம் டிராக்கிங்-ஐ டிவிட்டரில் பலர் அளிக்க துவங்கியுள்ளனர்.
இதனால் பெரும் பணக்காரர்கள், நிறுவன தலைவர்கள் தங்களுக்கு பிரைவசி குறைவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறை கூறி வந்தனர்.
இதில் கடுப்பான பெர்னார்ட் அர்னால்ட் தனது பிரைவேட் ஜெட்-ஐ விற்பனை செய்துள்ளார்.
LVMH நிறுவனம்
லூயிஸ் உய்ட்டன் மொயட் ஹென்னெஸி என்னும் உலகின் டாப் ஆடம்பர பிராண்டாக இருக்கும் LVMH நிறுவனத்தின் தலைவரும் உலகின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் பெர்னார்ட் அர்னால்ட் சமீபத்தில் அவரது பிரைவேட் ஜெட்-ஐ விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெட் விமானம்
LVMH நிறுவனம் சொந்தமாக ஒரு ஜெட் விமானத்தை வைத்திருந்தது, அது தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் இனி யாரும் தான் எங்கு போகிறேன் என்பதை காண முடியாது. இது மட்டும் அல்லாமல் பெர்னார்ட் அர்னால்ட் இனி புதிதாக விமானத்தை வாங்காமல் வாடகைக்கு விமானத்தை எடுத்து பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
டிவிட்டர்
டிவிட்டரில் laviondebernard என்ற பெயர் கொண்ட ஒரு டிவிட்டர் கணக்கு பெர்னார்ட் அர்னால்ட் விமானத்தை தனிப்பட்ட முறையில் டிராக் செய்வது மட்டும் அல்லாமல் பிரான்ஸ் நாட்டின் பெரும் தலைவர்கள், பணக்காரர்களின் பிரைவேட் ஜெட்-ஐ டிராக் செய்து வருகிறார்.
பெர்னார்ட் அர்னால்ட்
இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பெர்னார்ட் அர்னால்ட் LVMH நிறுவனம் சொந்தமாக ஒரு ஜெட் விமானத்தை பிரான்ஸ் ரிஜிஸ்டரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது என இந்த டிவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.
நிறுவனம்
ஒரு நிறுவன தலைவர் எங்கெல்லாம் செல்கிறார் என தெரிந்துக்கொண்டால் போட்டி நிறுவனங்களுக்கு இது சாதகமாக மாறும் என பெர்னார்ட் அர்னால்ட் மகன், Antoine Arnault தெரிவித்துள்ளார். இதனால் இனி வாடகை விமானத்தில் பயணிக்க உள்ளதாக அறிவித்தார்.
பிரபலங்கள்
டிவிட்டரில் பெர்னார்ட் அர்னால்ட் விமானத்தை மட்டும் அல்லாமல் எலான் மஸ்க், டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் கர்தாஷியன் குடும்ப உறுப்பினர்கள் போன்ற பலரின் விமானத்தை டிராக் செய்யும் தளங்கள் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications