லூயிஸ் உய்ட்டன் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஏனெனில் விலையுயர்ந்த பொருட்களை, அதுவும் வித்தியாசமான பொருட்களை அறிமுகப்படுத்துதில் பேர் போனது.
பொதுவாக balenciaga தான் இதுபோன்ற பொருட்களை அறிமுகப்படுத்தும். ஆனால் தற்போது லூயிஸ் அதனை தாண்டி விட்டது.
தற்போது லூயிஸ் உயிட்டன் பெயிண்ட் டப்பா வடிவில் ஒரு பேக்கினை வடிவமைத்துள்ளது, இதுவே பலரின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த பேக்கின் விலை இன்னும் பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
விலை எவ்வளவு தெரியுமா?
ஆடம்பரமான வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேக்கின் விலை 1980 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 1.9 லட்சம் ரூபாய்க்கு மேல்). மாட்டுதோலில் செய்யப்பட்டுள்ள இந்த பேக், கேன்வாஸ் ஆல் பூசப்பட்டுள்ளது. அதோடு மைக்ரோஃபைபர் லைனிங்குடனும் உள்ளது.
பெயிண்ட் டப்பா போன்ற பேக்
இந்த பேக்கில் சரி செய்யக்கூடிய கைப்பிடிகளுடன் கூடிய ஸ்டராப்பும் உள்ளது. இது சில்வர் கலருடன் பல வண்ணங்களைக் கொண்டுள்ளது. மொத்தத்தில் பார்ப்பதற்கு பெயிண்ட் டப்பா போன்றே உள்ளது. இதனை ஒரு முறை தூரத்தில் இருந்து பார்த்தால் நிச்சயம் இது பெயிண்ட் டப்பா போன்றே இருக்கும். இதனை அருகில் இருந்து பார்க்கும்போது தான் இது ஒரு பேக் என்பது போல காணப்படுகின்றது.
பல கமண்ட்டுகள்
இந்த பேக்கில் உள்ள ஸ்டராப்பினை நீக்கிவிட்டு பார்த்தால், இதனை பேக் என்று சொல்வதே கடினமாகத் தான் இருக்கும். இது குறித்து இணையத்தில் பலரும் தங்களது கமண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது நன்றாக இருக்கிறது என்றாலும், பலரும் எதிர்வினையாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது நாகரீகமாக
ஒரு பயனர் பெயிண்ட் கேனை எடுத்து செல்வது நாகரீகமாக கருதப்படுகிறதா என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் இதன் விலை அதிகமாக இருந்தாலும், இதில் இரண்டு தொலைபேசி மற்றும் பிற பொருட்களை வைத்திருக்க போதுமான இடம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல வண்ணங்களில்
இந்த வித்தியாசமான பேக் ஆனது நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு என்ற பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உள்ளது. இது பலரையும் கவர்ந்தாலும் பெயிண்ட் டப்பா போல் உள்ளதை எப்படி வெளியில் எடுத்து செல்ல முடியும் என்ற கேள்வியையே பலரும் எழுப்பி வருகின்றனர்.
எனினும் வித்தியாசமான இதுபோன்ற பொருட்கள் அடிக்கடி மக்கள் மத்தியில் டிரெண்டாகி வருவது தான்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications