உலகப் புகழ்பெற்ற லூயி விட்டான் நிறுவனம் தங்களது புதிய ஃபேஷன் காட்சியில் இந்தியாவின் ஆட்டோ ரிக்ஷாவை கைப்பை வடிவில் காட்சிப்படுத்தியது. பிரஞ்சு லக்ஸரி பிராண்ட் லூயி விட்டான் (Louis Vuitton) ஆண்களுக்கான 2026 ஸ்பிரிங்/சம்மர் ஃபேஷன் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் கவனம் பெற்றது ஒரு ஆட்டோ ரிக்ஷா வடிவில் வடிவமைக்கப்பட்ட கைப்பை தான். இந்த ஹேண்ட் பேக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வித்தியாசமான இந்த வடிவமைப்பை பார்த்த இணையவாசிகள் பல்வேறு கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த சம்பவம், இந்திய பாரம்பரிய பொருட்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை முறைகள் கூட இப்போது உலக பிராண்டுகளின் "டிசைன் இன்ஸ்பிரேஷனாக" மாறிவருவதை மீண்டும் உறுதி செய்கிறது. இந்த ஃகலெக்ஷன், இந்திய பாரம்பரிய கைத்தறி மற்றும் குடில்நாட்டுக் கைவினைகளை (indigenous craftsmanship) பிரதானமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தெரு கலாச்சாரத்துக்கு ஒரு 'லக்ஸுரி' மாற்றத்தைக் கொடுத்தது இந்த காட்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. ஆட்டோ ரிக்ஷா வடிவ கைப்பையைப் போலவே, இந்திய பாரம்பரியத்தின் பல கூறுகளும் நவீன ஃபேஷன் மொழியில் உருவாக்கப்பட்டிருந்தன. இது கலாச்சாரம், கலை மற்றும் உலகளாவிய ஃபேஷனின் சந்திப்பாக இருந்தது.

இந்த ஃபேஷன் காட்சியில் பல வடிவமைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்திருந்தாலும், அனைவரது கவனத்தையும் இழுத்தது ஆட்டோ ரிக்ஷா வடிவிலான கைப்பைதான். பொதுமக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் இந்த ஆட்டோ ரிக்ஷா வடிவமைப்புக்கு ரூ.35,00,000 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, "சாதாரண ஆட்டோ ரிக்ஷாவுக்கே இவ்வளவு விலை? என்ற கேள்விகளும் நகைச்சுவையான பதிவுகளும் தொடர்ந்து வருகின்றன. இது சாதாரண வடிவமைப்பல்ல. கலாசாரங்களை சிந்திக்க வைக்கும் புதிய முயற்சி ஆகும். இந்த ஆட்டோ ரிக்ஷா வடிவில் வடிவமைக்கப்பட்ட கைப்பை தொடர்பான விவகாரம், தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டும், கலாச்சார மற்றும் ஃபேஷன் உலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பிரபலமான சமூக ஊடகக் கலைஞர் @DietParatha, லூயி விட்டானின் இந்த "ஆட்டோ ரிக்ஷா பைக்" குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நகைச்சுவையுடனும், விமர்சனத்துடனும் எழுதியிருந்தார். லூயி விட்டானின் Spring/Summer 2025 மென்பாக்ஸ் ஃபேஷன் ஷோவில், இந்த ஆட்டோ ரிக்ஷா வடிவ கைப்பை மேடையில் காணப்படவில்லை. ஷோவுக்குப் பிறகு நடந்த "re-see" நிகழ்வில், ஒரு ஷெல்ஃப்பில் இது வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆட்டோ ரிக்ஷா வடிவ கைப்பை, லூயி விட்டான் பிராண்டின் புகழ்பெற்ற "மோனோகிராம் கேன்வாஸ்" வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய சக்கரங்கள் மற்றும் ஒட்டகத் தோல் நிறத்தில் உள்ள கைப்பை பிடிகள் ஆகியவை, இதை தெரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒருவகை கலைச் சிற்பமாகவே மாற்றியுள்ளன. இந்த வடிவமைப்பில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் உலக ஃபேஷனின் மரபுகள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன.
லூயி விட்டான் அறிமுகப்படுத்திய ஆட்டோ ரிக்ஷா வடிவ கைப்பை இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றதோடு, நகைச்சுவையான பதிவுகளும் பின்னணியாகத் துவங்கிவிட்டன. பெரும்பாலான நெட்டிசன்கள், பெரிய பிராண்டுகள் இப்போது புதிய ஐடியாக்கள் இல்லாமலா தவிக்கின்றன எனக் கேள்வி எழுப்ப, சிலர் இந்த பையை ஒரு ஸ்டேட்மென்ட் பீஸ் (statement piece) என கூறியுள்ளனர்.
லூயி விட்டான் quirky வடிவமைப்புகளில் புதியதல்ல. விமானம், டால்பின், லாப்ஸ்டர் போன்ற விலங்கு மற்றும் பொருள் வடிவில் பல கைப்பைகள் இதற்குமுன் உருவாக்கி உலகத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ஆட்டோ ரிக்ஷா வடிவில் உருவான கைப்பை இந்திய கலாசாராத்தையும், வாழ்வியலையும் ஒரு சுவாரஸ்யமான முறையில் கொண்டு செல்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications