ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத காரணத்தால் ரீடைல் பணவீக்கம் 4.29 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளையில் மார்ச் மாதத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவீடு (IIP) 22.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி அளவீட்டில் ஏற்பட்டு உள்ள இந்தத் தடாலடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் low base effect எனக் கூறப்படுகிறது.
சரி low base effect-ன்னா என்ன..?!
தொழிற்துறை உற்பத்தி அளவீடு
கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு நாட்டின் மொத்த உற்பத்தியும் முடங்கிய நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் உற்பத்தி அளவீடு உச்சத்தை அடைந்துள்ளது.
low base effect-க்கு உதாரணம்
வர்த்தகம் அல்லது பொருளாதாரத்தில் ஏற்படும் சிறிய வளர்ச்சி பெரிய சதவீதத்தில் கணக்கிடப்படும், உதாரணமாக ஒரு 10 லட்ச ரூபாய் போட்டுத் தொழில் துவங்குகிறது. முதல் நாளில் 100 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடக்கிறது, அடுத்த நாள் 150 ரூபாய்க்கு வியாபாரம் ஆகிறது என்றால் இதில் 50 சதவீத வளர்ச்சி. இந்த நிலையைத் தான் low base effect என அழைக்கப்படுகிறது.
2020-21 நிதியாண்டில் IIP அளவீடு
ஆனால் 2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தி அளவு -8.6 சதவீதத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு அதாவது 2019-20ஆம் நிதியாண்டில் -0.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய உற்பத்தித் துறை
மார்ச் மாதத்தில் உற்பத்தித் துறை 25.8 சதவீதமும், மின்சார உற்பத்தி 22.5 சதவீதமும், சுரங்க துறை 6.1 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாதம் ஐஐபி விகிதம் 22.4 சதவீதம் வரையில் உயர்வதற்கு இந்த 3 துறையும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
ரீடைல் பணவீக்கம்
ஏப்ரல் மாதம் உணவுப் பொருட்களின் விலை பெரிய அளவவில் மாற்றம் இல்லாத காரணத்தால் தொழிற்துறை உற்பத்தி பொருட்களின் விலையிலும் மாற்றம் குறைவாகவே உள்ளது. இதன் வாயிலாக மார்ச் மாதம் இருந்து 5.52 சதவீதத்தில் இருந்து 4.29 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications