சென்னை: இந்தியாவின் முன்னணி வங்கியாக இருக்கக்கூடிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தது காரணமாக ஒரு நபருக்கு வேலைவாய்ப்பினை மறுத்து இருக்கிறது .இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றமும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முடிவு சரியானது என தீர்ப்பளித்து இருக்கிறது .
சகோதரருக்காக கடன்: ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்து வந்த ஒரு ஊழியர் , தன்னுடைய சகோதரர் தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக வங்கியில் தன் பெயரில் கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். சகோதரரின் தொழிலை தக்க வைக்க , இவர் தனது பெயரிலேயே பல வங்கிகளில் தனிநபர் கடன்களையும் வாங்கி கொடுத்திருக்கிறார். தனக்கு கிடைத்த சம்பளம், தம்பியின் தொழிலில் கிடைத்த வருமானம் ஆகியவற்றை கொண்டு அவர் கடன்களை திரும்ப செலுத்தி வந்தார்.

பல வங்கிகளில் தனிநபர் கடன்: இந்நிலையில் அவர் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு துணை மேலாளராக பதவி உயர்வு பெற்று வேலைக்கு சென்று விட்டார். திடீரென அவரது சகோதரருக்கு விபத்து ஏற்பட்டு அவரால் தொழிலை நடத்த முடியவில்லை. இதனால் இவர்களால் கடன்களை செலுத்த முடியவில்லை. இவர் பெயரில் வாங்கிய பல கடன்கள் நிலுவையில் இருந்தன. வங்கிகள் தரப்பில் இவர் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால் இவருடைய கிரெடிட் ஸ்கோர் பெருமளவு குறைந்துவிட்டது.
எஸ்பிஐ வங்கியில் வேலை: இதற்கிடையே இவர் எஸ்பிஐ வங்கியில் வேலைக்கு விண்ணப்பம் செய்துள்ளார். எஸ்பிஐ வங்கியில் சர்க்கிள் அதிகாரிக்கான தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் நேர்காணலிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எஸ்பிஐ வங்கி வேலைக்கான கடிதத்தையும் வழங்கிவிட்டது. ஆனால் அவர் வேலையில் சேர சென்ற போது திடீரென உங்களுக்கு வேலை இல்லை என கூறியுள்ளது. உங்களுடைய சிபில் ஸ்கோர் மிக குறைவாக இருக்கிறது என காரணம் தெரிவித்துள்ளது.

சிபில் ஸ்கோர் குறைவு என்பதால் வேலை இல்லை: எஸ்பிஐ வங்கியின் இந்த முடிவினை எதிர்த்து அந்த ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். எஸ் பி ஐ வங்கியில் வேலை கிடைக்கிறது என்பதற்காக நான் ஏற்கனவே எச்டிஎப்சி வங்கியில் செய்து வந்த வேலையும் விட்டுவிட்டேன் எனக் கூறியிருக்கிறார். என்னுடைய கடன் விவரங்களையும் நான் வெளிப்படையாக தெரிவித்துவிட்டேன் இருந்தாலும் எனக்கு வேலையை நிராகரிக்கின்றனர் என கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு: வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்பிஐ நிர்வாகத்தின் முடிவு சரியானதுதான் என தெரிவித்திருக்கிறது . எஸ்பிஐ வங்கியின் ஊழியர்கள் கொள்கையில் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதன் அடிப்படையில் ஒரு நபருக்கான பணி வாய்ப்பினை மறுக்கலாம் என கூறுகிறது. அதன் அடிப்படையில் தான் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
நிதி ஒழுக்கம் கட்டாயம்: வங்கித் தொழிலில் இருப்பவர்கள் பொதுமக்களின் பணத்தை கையாளுகிறார்கள் அவர்களுக்கு கட்டாயம் நிதி சார்ந்த ஒழுக்கம் என்பது அவசியம் அதன் அடிப்படையில் தான் இப்படி ஒரு முடிவினை எஸ்பிஐ வங்கி எடுத்து இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் வங்கி வேலைக்கு செல்லக்கூடிய நபர்களுக்கும் மிக முக்கிய படிப்பினையை தந்துள்ளது.
வங்கி வேலை தேடுவோர் கவனம்: அதாவது வங்கி வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் வாங்கும் கடன் மற்றவர்களுக்காக தங்கள் பெயரில் வாங்கி தரும் கடன்களில் கவனமாக இருக்க வேண்டும். வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் சிபில் ஸ்கோரை சரியாக வைத்திருப்பது கட்டாயம் ஏனெனில் இதனை காரணமாக கூறி உங்களின் வேலைவாய்ப்பு மறுக்கப்படும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications