சிலர் குறைந்த சம்பளத்தில் வேறு வழியின்றி குடும்பத்திற்காக பணிக்கு சென்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் தனக்கென ஒரு தொழிலை சொந்தமாக செய்ய வேண்டும் என்று பலர் எண்ணுவதுண்டு. இதுபோன்ற சிந்தனை வந்தாலும் தொழில் தொடங்குவதற்கு என்று முதலீடு இருக்காது. பலருக்கும் இதுதான் பெரிய பிரச்சனை. அப்படி அதிக முதலீடு இல்லாமல் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. இதில் 20,000 ரூபாய்க்கும் கீழ் தொடங்கக்கூடிய தொழில்கள் குறித்து பார்ப்போம்.
சாமானியர்களையும் பெரிய தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்படும் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய லோனும் கிடைக்கிறது. தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் இது போன்ற லோன்களை வாங்கலாமா? என்பது குறித்து பரிசீலிக்கலாம். அதன் பிறகு உங்களுக்கு ஏற்ற வணிகத்தை தேர்ந்தெடுத்து தொடங்கலாம். சரி 20,000-திற்கும் கீழ் முதலீடு தேவைப்படும் தொழில்கள் குறித்து பார்ப்போம்.

மொபைல் ரிப்பேர் ஷாப்: மொபைல் ரிப்பேர் சேவையை நீங்கள் ரூ.20,000-த்திற்கும் கீழ் தொடங்க முடியும். இந்த வணிகம் மிகவும் லாபகரமானது. ஏனெனில் இன்று ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்க்க முடிவதில்லை. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு அவ்வப்போது சில செலவுகள் இருக்கும். டிஸ்ப்ளே மாற்றுவது, சார்ஜிங் போர்ட் சரி செய்வது என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். மொபைல் போன்கள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்து ஒரு போனை சரி செய்வதற்கான அனைத்து விஷயங்களும் தெரிந்திருந்தால், போதும் வீட்டிலேயே நீங்கள் மொபைல் ரிப்பேர் ஷாப்பைத் தொடங்கலாம். ஆனால் அதற்கு தேவையான பார்ட்ஸ் குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கன்டென்ட் ரைட்டிங்: சமீப வருடங்களாக வளர்ந்து வரும் இ-காமெர்ஸ் சந்தை மற்றும் வணிகங்களுக்கு டிஜிட்டல் செயல்முறைகள் அத்தியாவசியமாகியுள்ளது. எனவே SEO கன்டென்ட் ரைட்டிங், டெக்னிக்கல் கன்டென்ட் ரைட்டிங், சோசியல் மீடியா கன்டென்ட் ரைட்டிங் போன்றவற்றுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. எனவே இது போன்ற பிசினஸ் செய்வது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம். இதற்கும் பெரிய அளவிலான முதலீடுகள் எதுவும் தேவைப்படாது.
ஊறுகாய் பிசினஸ்: இன்றெல்லாம் வெஜ் ஊறுகாய்கள் மற்றும் நான் வெஜ் ஊறுகாய்கள் பிரபலமடைந்து வருகின்றன. எனவே நீங்கள் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்யலாம். இது போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்க தரம் மற்றும் சுவை ஆகியவற்றில் அதீத கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலிருந்தே தயாரித்து ஆன்லைன் மூலம் மார்க்கெட்டிங் செய்யலாம்.
ஹோம் கேட்டரிங் அல்லது டிபன் சென்டர்: வீட்டில் இருந்து சமையல் செய்து விற்பனை செய்யலாம். இன்றெல்லாம் ஜோடியாக பணிக்கு செல்லும் வீடுகள் அதிகரித்துவிட்டன. இதனால் வீட்டில் சமைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. எனவே இது போன்ற நபர்களை உங்களுடைய வாடிக்கையாளர் ஆக்கினால்.. இதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். ஆனால் அதற்கு தரம் மற்றும் சுவையாகியவை முக்கியம். சமையல் செய்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் ரூ. 20,000-த்தில் டிபன் சென்டரை தொடங்கலாம்.
இயற்கை விவசாயம்: ஹாபிக்காக தொடங்கி வீட்டின் மொட்டை மாடியிலேயே பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வளர்க்கும் நபர்கள் அதிகரித்துவிட்டனர். இதில் சிலர் காளான் வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற விவசாயம் செய்வதற்கு அதிக அளவிலான முதலீடு தேவைப்படாது. ஆனால் அனுபவம் இன்றி தொடங்கும் போது சற்று சிக்கலானதாக இருக்கலாம். ஆனால் பயிற்சி பெற்று விவசாயத்தில் இறங்கினால் நல்ல வருமானம் பெறலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications