இந்திய எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை எப்படி குறைத்து என புரியாத இந்த நிலையில் அடுத்த இன்ப அதிர்ச்சியாக வணிக பயன்பாட்டு 19 கிலோ LPG சிலிண்டர்களின் விலை இன்று குறைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், 5 கிலோ எடையுள்ள குடும்ப நலத்திட்ட எரிவாயு (FTL) சிலிண்டர்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது என அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ள வேளையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் அடுத்தடுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைத்து வருவது மக்கள் பல வருட போராட்டத்திற்குக் கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது.
இன்றைய விலை குறைப்பு மூலம் டெல்லியில் ஏப்ரல் 1ம் தேதி முதல், 19 கிலோ கிராம் வணிக LPG சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டு ரூ.1764.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ கிராம் எடையுள்ள குடும்ப நலத்திட்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7.50 குறைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1ம் தேதி வணிக LPG சிலிண்டர்களின் விலையை உயர்த்திய நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்களே இத்தகைய விலை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணங்கள்.
ஆனால் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் முதல் எரிவாயு வரையில் அதிகப்படியான விலையை கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய விலை குறைப்புக்கான சரியான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு மூலம் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளின் விலை குறைக்கப்படலாம், ஆனால் 100-க்கு 90 கடைகள் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.
பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்தது மூலம் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் குறைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால், ஏப்ரல் 3-5 வரையில் நடக்கும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைக்கப்படுமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது. MPC கூட்டத்தின் முடிவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications