14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

வளைகுடா பகுதியில் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்ப் மிரட்டலுக்கு பின்பு ஹார்மூஸ் பாதையை மொத்தமாக முடக்கிவிடுவோம் என ஈரான் பதில் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் எரிவாயு இருப்பு மற்றும் விநியோகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் அளவை தற்காலிகமாக குறைக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

மத்திய அரசின் திட்டம்
தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுடைய எல்பிஜி சிலிண்டர்களில், 10 கிலோ அளவிளான எரிவாயு மட்டுமே நிரப்பி விநியோகம் செய்யலாம் என் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், குறைந்தளவில் உள்ள எரிவாயு கையிருப்பை அதிகப்படியான குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்க முடியும் என்பதை இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

எரிவாயு நிரப்பும் அளவு குறைக்கப்படுவது மூலம் கூடுதலாக குடும்பங்களுக்கு சேவை அளிக்க முடியும், இதேபோல் பற்றாக்குறை பிரச்சனையை எல்லை மீற காலம் தாழ்த்த முடியும்.

எண்ணெய் நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, ஒரு சாதாரண 14.2 கிலோ சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை பயன்படும். இதேபோல், 10 கிலோ சிலிண்டர் சுமார் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும். இதனால், குறைந்த கையிருப்புகளுடன் கூட அதிக வீடுகளுக்கு விநியோகம் தொடர முடியும் என கணக்கிட்டு உள்ளது.

குறையும் கையிருப்பு, பாதிப்புக்குள்ளான இறக்குமதி
ஈரான் மோதலின் விளைவாக, வளைகுடா பகுதிகளில் இருந்து எல்பிஜி இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Strait of Hormuz வழியாக வரும் கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் இந்த பாதை வழியாக இந்தியாவுக்கு பெரும் போராட்டித்திற்கு பின்பு, பேச்சுவார்த்தைக்கு பின்பு ஈரான் ராணுவம் இரண்டு எரிவாயு கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்ப அனுமதி அளித்தது.

இதன் மூலம் இந்தியாவுக்கு சுமார் 92,700 டன் எரிவாயுவை கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவின் ஒருநாள் தேவைக்கே சமமான அளவாகும். இதை தொடர்ந்து புதிய கப்பல்கள் எதுவும் தற்போது வரவில்லை, வரும் பாதையிலும் இல்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

வர்த்தக சிலிண்டர் பாதிப்பு
முதலில், வணிக பயனாளர்களுக்கு (Commercial users) எல்பிஜி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் பின்னர், 40% வரை விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் வீட்டு பயன்பாட்டிற்கான கையிருப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய சப்ளையும் குறைந்துள்ளது, இதனால் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க துவங்கியுள்ளது.

மேலும் எரிவாயு விநியோக நிலைமை குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில் 'நிலைமை கவலைக்கிடமாக உள்ளது' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம், வீடுகளுக்கு விநியோகம் வழக்கம்போல நடைபெறுகிறது என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிலிண்டர் அளவை குறைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், எடை குறைப்பை மக்களை மக்களுக்கு காட்டும் விதமாக புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். மேலும், நிரப்பு நிலையங்களில் எடை கணக்கீட்டு அமைப்புகள் மாற்றப்பட வேண்டும். இதற்கு கூடுதல் ஒழுங்குமுறை அனுமதிகளும் தேவைப்படும்.

இதே நேரத்தில், திடீர் அளவு குறைப்பு பொதுமக்களிடையே குழப்பத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக தேர்தல்கள் நெருங்கி வரும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்பிஜி சிலிண்டர் அளவு குறைக்கப்பட்டாலும், விலையும் அதற்கு ஏற்ப குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+