மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான மோதல் தீவிரமடைந்ததால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு-வுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
இதன் விளைவாக மக்கள் எரிவாயு இல்லாமல் வீட்டிலும், ஹாஸ்டல்களிலும் சமைக்க எலக்ட்ரிக் சமையல் உபகரணங்களான இண்டக்ஷன் அடுப்பு, ரைஸ் குக்கர், எலக்ட்ரிக் கெட்டில், ஏர் ஃப்ரையர் போன்றவற்றை வாங்க முடிவு செய்தனர். இதனால் தேவை பல மடங்கு அதிகரித்து இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் தற்போது Out Of Stock ஆகியுள்ளது. இது சமையல் உபகரண நிறுவன பங்குகளுக்கு பெரும் லாபத்தை தந்துள்ளது.

Out Of Stock நிலை
இந்தியாவில் சமையல் எரிவாயு விலை குறைவாகவும், இடைவிடாமலும் கிடைக்கும் காரணத்தால் மக்களுக்கு இண்டக்ஷன் அடுப்பு, ரைஸ் குக்கர், எலக்ட்ரிக் கெட்டில், ஏர் ஃப்ரையர் போன்றவற்றுக்கான தேவை எப்போதும் குறைவாகவே இருக்கும். இப்பொருட்களுக்கான முக்கிய வாடிக்கையாளர்கள் என்றால் விடுதியிவும், PG-களிலும் தங்கியிருப்பவர்கள் தான். இதனால் இதன் உற்பத்தியிலும், கடைகளிலும் இருப்பு குறைவாகவே இருக்கும்.
ஆனால் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக திடீர் தேவை காரணமாக சந்தையில் போதுமான இருப்பு இல்லாமல் காரணத்தால் தற்போது கடைகளிலும் சரி, குவிக் காமர்ஸ் - ஈகாமர்ஸ் தளத்திலும் சரி Out Of Stock நிலை வந்துள்ளது.
பங்கு சந்தையில் பெரும் உயர்வு
ஸ்டோவ் கிராஃப்ட் (பீஜியன் பிராண்ட்), TTK பிரஸ்டீஜ் (பிரஸ்டீஜ் பிராண்ட்), பட்டர்ஃப்ளை காந்திமதி அப்ளையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு விலை இந்த வாரம் 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
TTK பிரஸ்டீஜ் பங்கு கடந்த ஐந்து நாட்களில் 22 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து, இன்று ஒரு நாளில் மட்டும் 9.81 சதவீதம் உயர்ந்து ரூ.588-ஐ எட்டியது. ஸ்டோவ் கிராஃப்ட் பங்கு இன்று 3.95 சதவீதம் உயர்ந்து ₹510.40-ஆக வர்த்தகமானது. இது சந்தை மந்தநிலையில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Butterfly Gandhimathi Appliances பங்குகள் கடந்த 5 நாட்களில் 15.22 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
எல்பிஜி நெருக்கடியால் தேவை பெருக்கம்
எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக மக்கள் எலக்ட்ரிக் சமையல் உபகரணங்களை நோக்கி செல்கின்றனர். டாடா குழுமத்தின் எலக்ட்ரிக் உபகரணங்கள் விற்கும் பிராண்டான க்ரோமா கடந்த சில நாட்களில் இண்டக்ஷன் அடுப்பு தேவை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்டோவ் கிராஃப்ட் நிறுவனம் தனது ஆன்லைன் வாராந்திர விற்பனை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. அமேசான் இந்தியா கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் இண்டக்ஷன் அடுப்பு விற்பனை 30 மடங்கு உயர்ந்துள்ளது. ரைஸ் குக்கர் மற்றும் எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் 4 மடங்கு உயர்வு கண்டுள்ளது. ஏர் ஃப்ரையர் மற்றும் மல்டி-யூஸ் கெட்டில் 2 மடங்கு உயர்வு கண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
க்விக் காமர்ஸ் தளங்களான பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் போன்றவற்றில் இண்டக்ஷன் அடுப்புகள் Sold out ஆகியுள்ளன. டெல்லி-NCR, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் அமேசான் நவ் மூலம் இந்த உபகரணங்கள் சில நிமிடங்களில் டெலிவரி செய்யப்படுகின்றன.
சென்னையில் முக்கிய எலக்ட்ரிக் அப்ளையன்ஸ் கடைகளான வசந்த் அண்ட் கோ, சத்யா போன்றவற்றில் இண்டக்ஷன் அடுப்பு, ரைஸ் குக்கர், எலக்ட்ரிக் கெட்டில், ஏர் ஃப்ரையர் விற்று தீர்ந்துள்ளது. கடை மேலாளர்கள் இந்த அளவுக்கு டிமாண்ட் இருக்கும் என எங்களுக்கு தெரியாது, இதனால் போதுமான இருப்பு வைத்திருக்கவில்லை எனவும் தெரிவித்தனர். கடைகளில் ஸ்டாக் பீஸ் பொருட்களை தாண்டி, டிஸ்பிளே பீஸ் பொருட்களை வரையில் விற்று தீர்ந்துள்ளது எனவும் கடை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சிரமம்
பல நகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர் டெலிவரி தாமதமாகி வருகிறது. இது ஹோட்டல்கள், உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள் போன்றவற்றை பெரிதும் பாதிக்கிறது. இதன் எதிரொலியாக இன்று ஸ்விக்கி, சோமேட்டோ பங்குகளும் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பேச்சுலர்களுக்கு.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!



Click it and Unblock the Notifications