எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு இந்தியா முழுவதும் கோடி கணக்கான மக்களை நேரடியாகவே பாதிப்படைய வைத்திருக்கிறது. ஒருபுறம் சிலிண்டர்கள் கிடைக்காமல் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன, மற்றொருபுறம் வீடுகளுக்கு சிலிண்டர் புக் செய்து இன்னும் டெலிவரி கிடைக்கவில்லை என மக்கள் கேஸ் ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
வீட்டு உபயோகத்திற்கு தற்போது சிலிண்டர் இருந்தாலும் அது விரைவில் காலியாகிவிடும், புக் செய்தும் சிலிண்டர் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்ற அச்சம் லட்சக்கணக்கான இல்லத்தரசிகளிடம் ஆட்கொண்டிருக்கிறது. எப்போது ஈரான் போர் முடிந்து எல்பிஜி விநியோகம் சீராகும் என்பது தெரியவில்லை, எப்போது இந்த தட்டுப்பாடு சரியாகும் என்பதும் கணிக்கமுடியவில்லை. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நேரடியாக நம் வீட்டு சமையலறை வரை வந்துவிட்ட சூழலில் வரும் முன் காப்பது தான் சிறந்தது.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய இந்தியா தன்னுடைய அத்தியாவசிய பொருளான எல்பிஜி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்திற்குமே வெளிநாடுகளை தான் பெரிய அளவில் சார்ந்து இருக்கிறது. இந்தியாவுக்கு தேவையான எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றில் 60 சதவீதத்திற்கும் மேல் வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகிறது. பத்து நாட்களுக்கு மேலாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வரவே இல்லை. இதன் காரணமாக உள்நாட்டில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
முதலில் ஹோட்டல்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது, அடுத்த கட்டமாக வீடுகளுக்கும் இதே நிலை வந்துவிடுவோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எனவே திடீரென கேஸ் தீர்ந்து விட்டு சிலிண்டர் கிடைக்காமல் அல்லாடுவதை விட இருக்கக்கூடிய கேஸை சிக்கனமாக பயன்படுத்தி அதனை நீண்ட நாட்கள் பயன்பாட்டுக்கு உரியதாக மாற்றிக் கொள்வது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்க கூடிய சூழலில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் எப்படி எல்லாம் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை மிச்சப்படுத்தலாம் என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பொது மக்கள் வீடுகளில் கேஸ் அடுப்பு இருந்தாலும் மின்சாரத்தில் இயங்கும் இண்டக்ஷன் அடுப்பையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. அவசர காலங்களில் இது உங்களுக்கு கை கொடுக்கும். சுடுதண்ணி வைக்க வேண்டும் , உணவு பொருட்களை சூடு படுத்துவது, டீ, காபி போடுவது போன்றவற்றுக்கு கேஸ் அடுப்புக்கு மாற்றாக இண்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் முடிந்தவரை உணவுகளை குக்கரில் சமைக்க வேண்டும். சாதம் வைப்பது, பருப்பு வேக வைப்பது போன்றவற்றுக்கு சாதாரண பாத்திரங்களை விட குக்கரில் வைக்கும் போது 20 லிருந்து 30 சதவீதமரை கேஸ் பயன்பாட்டை மிச்சப்படுத்த முடியும்.
அடுத்ததாக பாத்திரங்களை தாண்டி வெளியே வராதபடி அடுப்பு எரிவதை உறுதி செய்ய வேண்டும். பாத்திரத்திற்கு வெளியே வர கூடிய நெருப்பால் கேஸ் தான் வீணாகுமே தவிர விரைவாக சமைக்க முடியாது. அதே போல பாத்திரங்களை மூடி வைத்து சமைப்பதன் மூலம் உணவு வேகமாக சமைக்க முடியும் இதனால் கேஸ் பயன்பாட்டை சிக்கனப்படுத்தலாம்.
தற்போது கெட்டில்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. குடிக்க தண்ணீர் சூடு செய்வதற்கு கேஸ் அடுப்புக்கு பதில் கெட்டில்களை பயன்படுத்தலாம். குளிக்க சுடு தண்ணீர் வைக்க இண்டக்ஷன் அடுப்பினை பயன்படுத்தலாம்.
சமீப காலமாக NO FIRE COOKING என்ற கான்செப்ட் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. அதாவது அடுப்பே பற்ற வைக்காமல் உணவு சமைத்து உண்பது. இது சம்பந்தப்பட்ட ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கிடைக்கின்றன. ருசியான பல்வேறு உணவு வகைகள் இதில் பகிரப்படுகின்றன. எனவே பொதுமக்கள் தங்களுடைய உணவில் ஒரு வேளைக்கு NO FIRE COOKING உணவு முறைக்கு மாற்றிக் கொள்ளலாம் இது உங்களுடைய உடலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!



Click it and Unblock the Notifications