வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.918 வரை இன்றைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.450க்கு மட்டும் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்குப் பாதிக்குப் பாதி செலவு மிச்சமாகும். ஆனால் இந்த உத்தரவு தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படவில்லை.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பலன்தாரர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.450க்கு வழங்க மத்தியப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பயனாளிகளுக்கும் இதேவிலையில் எரிவாயு சிலிண்டரை வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநில உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
கூடுதல் சிலிண்டர் தேவைப்படுவோர் எண்ணெய் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலையில் வாங்கி கொள்ளலாம். மத்திய அரசு தரும் மானியம் பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இதற்கேப உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாநில அரசு மாற்றி நிர்ணயித்துள்ளது.
முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் யோஜனா போர்ட்டலில் பதிவு செய்யப்படும். இதன்படி குடும்பத்தலைவிகள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தினால் பயனடையலாம்.
இதற்கான பதிவு வேலைகள் முக்கியமந்திரி லட்லி பேஹ்னா யோஜனா திட்ட மையங்களில் நடைபெறும். இதற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு எண், எல்பிஜி இணைப்பு ஐடி, முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பதிவு அட்டை விவரங்களை அங்கு வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி உஜ்ஜாவ்லா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விவரத்தை மாதாமாதம் மாநில உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாதந்தோறும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் தெரிவிக்க வேண்டும். இதன்படி பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
அந்த மானியத் தொகை பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா அல்லாத கேட்டரிகிரியை சேர்ந்தவர்களின் லட்லி பேஹ்னா பதிவு எண் விவரம் எண்ணெய் நிறுவனத்துக்கு மாநில அரசு தரும்.
மானியம் பெறுவதில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் உருவாக்கப்பட்டு பயனாளிக்கு வழங்கப்படும்.
More From GoodReturns

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications