இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் தளத்தில் 809 ரூபாய் மதிப்புடைய எல்பிஜி சிலிண்டரை முதல் முறையாக புக் செய்வோருக்கு 800 ரூபாய் வரையில் கேஷ்பேக் அளிக்கப்படுவதாகவும், இதன் மூலம் வெறும் 9 ரூபாய்க்கு சமையல் சிலிண்டரை வாங்கலாம் என விளம்பரம் செய்து வருகிறது.
ஆனால் உண்மையில் 809 ரூபாய் சிலிண்டரை 9 ரூபாய்க்கு பெற முடியுமா..?! சிலிண்டர் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சமையில் சிலிண்டர் விலை
இந்தியாவில் சமையில் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் நிலையில் சாமானிய மக்களுக்கு சிலிண்டருக்கு ஆஃபர் என்றால் யார் தான் மயங்கமாட்டார்கள், அதுவும் 800 ரூபாய் வரையில் கேஷ்பேக் என்றால் யாருக்கு பிடிக்காது. சரி பேடிஎம்-ல் இந்த ஆஃபர் எப்படி வழங்குகிறது.
கேஸ் புக்கிங் சேவை
முதலில் இந்த ஆஃபர் பேடிஎம் தளத்தில் முதல் முறை கேஸ் புக்கிங் செய்வோருக்கு மட்டுமே என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த புதிய சலுகை ஏப்ரல் 30 வரையில் மட்டுமே கிடைக்கிறது. பேடிஎம் செயலியில் கேஸ் புக்கிங் சேவையில் கீழ் எல்பிஜி சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும்.
ஸ்கிராச் கார்டு மூலம் கேஷ்பேக்
முதல் முறையாக பேடிஎம் தளத்தில் கேஸ் புக் செய்து முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், அவ்வாறு பணத்தை செல்லுத்தியதும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கிராச் கார்டு கிடைக்கும். 7 நாள் வேலிடிட்டி கொண்ட இந்த ஸ்கிராச் கார்டில் கேஷ்பேக் கிடைக்கும்.
10 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கேஷ்பேக்
ஏற்கனவே தெரிவித்ததை போல் அனைவருக்கும் 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்காது, இந்த ஆஃபரிலேயே 10 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையில் என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ள காரணத்தால் 99 சதவீத வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பகட்ட ஆஃபரான 10 ரூபாய் மட்டுமே கிடைக்கும். சிலருக்கு உணவு, பொருட்கள் வாங்குவதில் கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications