LPG கேஸ் சிலிண்டர் முன்பதிவு முதல் விலை வரை..!! மே 1ஆம் தேதியில் இருந்து எல்லாமே மாறுது..!!

பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கியது. இதனை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய், எரிவாயு கப்பல்கள் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இது இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்தியா தனக்கு தேவையான பெரும்பாலான எல்பிஜியை வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்குகிறது.

எல்பிஜி விநியோகம் தடைப்பட்டதால் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் உணவகங்கள், டீக்கடைகள் மூடப்பட்டன. ஹோட்டல் உணவுகளின் விலையும் உயர்ந்தது. வீட்டு உபயோக சிலிண்டர்களை பொறுத்தவரை சிலிண்டர் புக்கிங் இடைவெளி காலம் என்பது அதிகரிக்கப்பட்டது. தற்போது இது நகர்ப்புறங்களுக்கு 25 நாட்கள் ஆகவும் கிராமப்புறங்களுக்கு 45 நாட்கள் ஆகவும் நீடிக்கிறது.

LPG கேஸ் சிலிண்டர் முன்பதிவு முதல் விலை வரை..!! மே 1ஆம் தேதியில் இருந்து எல்லாமே மாறுது..!!

இந்த சூழலில் நாட்டில் சிலிண்டர் பதுக்கல்களை தடுக்கவும் கள்ளச்சந்தையில் விற்பனையை நிறுத்தவும் ,தேவையான மக்களுக்கு முறையாக சிலிண்டர் சென்று சேர்வதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு விதிமுறை அடுத்த மாதத்திலிருந்து நாடு முழுவதும் 100% நடைமுறைக்கு வர இருக்கிறதாம்.

ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவரும் கேஒய்சி முடிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதே போல பிஎன்ஜி இணைப்புக்கு மாற வாய்ப்புள்ள வாடிக்கையாளர்கள் எல்பிஜி இணைப்பு விடுத்து பிஎன்ஜி-க்கு மாற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வரும் மே மாதத்தில் இருந்து ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி முறையை 100% நடைமுறைக்கு கொண்டு வர அரசும் சிலிண்டர் டெலிவரி நிறுவனங்களும் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்படி சிலிண்டர் நாம் முன் பதிவு செய்யும்போதே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். சிலிண்டர் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த ஓடிபி-ஐ நீங்கள் பகிர வேண்டும். அவ்வாறு பகிர்ந்தால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி கிடைக்கும்.

இதனை Delivery authentication Code என அழைக்கிறார்கள். எனவே சிலிண்டர் பதிவு செய்கையில் போனிற்கு வரும் மெசேஜை மறக்காமல் சேவ் செய்து கொள்ளுங்கள். இந்த ஓடிபி 4 இலக்க எண்களாக இருக்கும். இது இருந்தால் சிலிண்டர் டெலிவரி கிடைக்கும். ஏனெனில் இந்த கோடினை உள்ளிட்டால் தான் சிலிண்டர் டெலிவரி நிறைவேறியதாக நிறுவன சிஸ்டமில் அப்டேட் ஆகும். அந்த வகையில் சிலிண்டர் திருட்டு, கள்ள சந்தை விற்பனை ஆகியவை தடுக்கப்படுகிறது.

தற்போதைக்கு நாட்டில் 94 சதவீதம் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு விட்டது மே மாதத்திலிருந்து இதனை 100% நடைமுறைக்கு கொண்டு வர அரசு முடிவு செய்திருக்கிறதாம். அதே வேளையில் சிலிண்டர் விலை மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியன்று சிலிண்டர் விலை மாறும். சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை மாற்றம் இருக்கும். எனவே மே மாதத்தில் சிலிண்டர் விலை மாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+