சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி கிடைக்கலயா? உடனே இந்த நம்பர்ல புகார் பண்ணுங்க..!!

மேற்காசிய நாடுகளின் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகமாகி கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஹோட்டல்கள் மூடப்படும் சூழலில் மறுபுறம் பொதுமக்கள் சிலிண்டர் விநியோக மையங்களை முற்றுகையிட தொடங்கி விட்டனர். பலரும் தங்களால் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் கூறி வருகின்றனர்.

சிலர் முன்பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் தங்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை எனக் கூறுகின்றனர். பல்வேறு நகரங்களிலும் மக்கள் காலி சிலிண்டர்களோடு சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகங்களை முற்றுகை இடுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்து உரிய நேரத்தில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை அல்லது திடீரென உங்களுடைய முன்பதிவு ரத்து செய்து இருக்கிறார்கள்,அல்லது கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள் என்றால் உடனடியாக அது தொடர்பாக நீங்கள் புகார் தெரிவிக்கலாம் என்கிறது மத்திய அரசு.

சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி கிடைக்கலயா? உடனே இந்த நம்பர்ல புகார் பண்ணுங்க..!!

முன்னதாக எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடு காரணமாக சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி நாட்களை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அரசு நீட்டித்துள்ளது. சிலிண்டர் பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை ஆகியவற்றை தடுக்க அரசு எஸ்மா சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த சூழலில் நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்தும் உங்களுக்கு உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படவில்லை அல்லது கூடுதலாக உங்களிடம் பணம் கேட்கிறார்கள் என்பன போன்ற சூழ்நிலைகளில் உடனடியாக நீங்கள் புகார் தரலாம்.

Also Read

நீங்கள் இண்டேன் வாடிக்கையாளர் என்றால் இந்த Toll-Free Number: 1800-2333-555ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புகார் தீர்வு (Indian Oil grievance portal ) இணையதளத்திற்கு சென்று "Refill Not Delivered At Home," "Delay In Refill Supply," "Cash Memo Not Given," or "Refill Booking Cancelled" என்பதை கிளிக் செய்து புகார் தெரிவிக்கலாம்.

சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி கிடைக்கலயா? உடனே இந்த நம்பர்ல புகார் பண்ணுங்க..!!

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800 22 4344 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம். ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் 1800 233 3555 என்ற எண்ணையும் HP Gas online complaint portal அதாவது இணையதளம் வாயிலாகவும் புகார் தரலாம். உஜ்வாலா பயனாளர்கள் 1800-233-3555 மற்றும்
1800-266-6696 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு இண்டேன் வாடிக்கையாளர்கள் பின்வரும் வழிகளை கையாளலாம்.

Call/SMS Booking: 7718955555

WhatsApp Booking: 75888 88824 (Type REFILL)

Missed Call Booking: 84549 55555

IVRS/SMS Number: 77189 55555

அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம்.

Recommended For You

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் பின்வரும் வழிமுறைகளில் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்:

IVRS Booking Number: 77150 12345 or 77180 12345

WhatsApp Booking: 1800 224 344

அல்லது BPCL செயலி, இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

ஹெச்பி வாடிக்கையாளர்கள் பின்வரும் வழிமுறைகளில் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்:

Booking Call Number: 7718955555

WhatsApp Booking: 92222 01122

Missed Call Booking: 94936 02222

அல்லது HP Gas செயலி, இணையதளம் மூலமாகவும் புக்கிங் செய்யலாம்.

ஜிபே, அமேசான் பே போன்ற செயலிகளிலும் கன்சியூமர் எண் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும். தற்போது ஏராளமானவர்கள் சிலிண்டர் புக் செய்வதால் இந்த அமைப்புகளே சில சமயம் செயல்படாமல் போகலாம். எனவே பீக் அவர் இல்லாத சமயம் அதாவது மாலை 6 மணிக்கு மேல் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு முன்பு கேஒய்சி முடித்திருக்கிறீர்கலா என்பதையும் சரிபார்த்து கொள்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+