சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, வீட்டுச் செலவுகளைக் குறைக்கும் வகையில், வீட்டில் பயன்படுத்தும் 14.2 கிலோ சமையல் எரிவாயு (LPG) க சிலிண்டர் விலையில் ரூ.100 குறைப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
மார்ச் 7ஆம் தேதிய மத்திய அரசிடம் இருந்து வெளியான அறிவிப்புகளில் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைவருக்குமான சிலிண்டர் திட்டமான உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.300 சிலிண்டர் மானியத்தை அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து குடும்பங்களும் ஒரு சிலிண்டருக்கு 400 ரூபாய் வரையில் சலுகை பெற முடியும். குடும்பச் செலவுகளின் உயர்வு நடுத்தரப் பொருளாதாரக் குடும்பங்களை வாட்டி வதைத்து வரும் வேளையில் சிலிண்டருக்கு 400 ரூபாய் வரையிலான சலுகை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் இப்புதிய விலை குறைப்பிற்குப் பின் மானியம் இல்லாமல் மக்கள் பெறக்கூடிய சிலிண்டர் விலை நிலவரம்:
டெல்லி - 803 ரூபாய், கொல்கத்தா - 900.00 ரூபாய்,மும்பை - 802.5 ரூபாய், சென்னை - 818.5 ரூபாய், குர்கான் - 811.5 ரூபாய், நொய்டா - 800.5 ரூபாய், பெங்களூர் - 805.5 ரூபாய், புவனேஸ்வர் - 829 ரூபாய், சண்டிகர் - 812.5 ரூபாய், ஹைதராபாத் - 855 ரூபாய், ஜெய்ப்பூர் - 806.5 ரூபாய், லக்னோ - 840.5 ரூபாய், பாட்னா - 901.00 ரூபாய், திருவனந்தபுரம் - 812 ரூபாய்.
இதேபோல் வர்த்தகச் சிலிண்டர் அதாவது 19 கிலோ சிலிண்டர் விலை நிலவரம்
டெல்லி - 1795 ரூபாய், கொல்கத்தா - 2071.5 ரூபாய், மும்பை - 1749 ரூபாய், சென்னை - 1960.5 ரூபாய், குர்கான் - 1802.5 ரூபாய், நொய்டா - 1786.5 ரூபாய், பெங்களூர் - 1875 ரூபாய், புவனேஸ்வர் - 1948 ரூபாய், சண்டிகர் - 1816 ரூபாய், ஹைதராபாத் - 2027 ரூபாய், ஜெய்ப்பூர் - 1818 ரூபாய், லக்னோ - 1909 ரூபாய், பாட்னா - 2071 ரூபாய், திருவனந்தபுரம் - 1827.5 ரூபாய்.
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் கூறிய, தனது டிவிட்டர் பதிவில் எங்கள் நாரி சக்தியின் வலிமை, தைரியத்தை நாங்கள் வணங்குகிறோம், பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம்.
மேலும் கல்வி, தொழில்முனைவு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பலவற்றில் முன்முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க எங்கள் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாம் செய்த சாதனைகளிலும் இது பிரதிபலிக்கிறது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications