உயர்ந்தது சிலிண்டர் விலை: 10 மாதங்களில் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது?

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பாரத் கேஸ், இண்டேன், ஹெச்பி ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சூழல்களுக்கு ஏற்பவும் எல்பிஜி வரத்துக்கு ஏற்பவும் சிலிண்டர் விலை உயரலாம், குறையலாம் அல்லது மாறாமலே இருக்கலாம்.

ஈரான் போர் நடப்பதால் மார்ச் மாதம் முதல் இந்தியாவுக்கு வளைகுடா நாடுகளிடம் இருந்து எல்பிஜி வரத்து நின்று போயுள்ளது. இதனால் அமெரிக்காவிடம் எல்பிஜி கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த எல்பிஜி கொள்முதல் செலவை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்த வண்ணம் உள்ளன.

உயர்ந்தது சிலிண்டர் விலை: 10 மாதங்களில் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது?

அக்டோபர் 1ஆம் தேதியான இன்று சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை 66.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள், மெஸ் உள்ளிட்டவற்றை நடத்துவோருக்கு சமையல் கேஸ் சிலிண்டருக்கான செலவு அதிகரித்துள்ளது.

Also Read

எனவே சென்னையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் தற்போது 2,984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே சமையல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வும் வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேற்கொண்டு டீ, காஃபி, ஹோட்டல் சாப்பாடுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் பலகாரங்கள், இனிப்புகள், கார வகைகளின் விலையும் உயர போகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து தற்போது அக்டோபர் வரையிலான இந்த 10 மாதத்தில் மட்டும் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 1244 ரூபாய் விலை கூடியுள்ளது. 10 மாதங்களில் 8 மாதங்கள் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது, 2 மாதங்கள் மட்டுமே விலை குறைந்துள்ளது. 957.50 ரூபாய் என்ற அளவிலேயே நீடிக்கிறது. எனவே நம் வீட்டு பட்ஜெட்டிற்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஜூலை மாதத்தில் இருந்து மாற்றப்படாமல் உள்ளது. ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையிலான 9 மாதங்களில் எல்பிஜி சிலிண்டர் விலை 89 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

Recommended For You

ஈரான் போர் தான் இந்தியாவில் சிலிண்டர் விலைகள் அதிகரிக்க காரணம். ஏனெனில் இந்தியா தனக்கு தேவையான எல்பிஜியில் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்கி வந்தது. இதற்கு ஹார்முஸ் ஜலசந்தி தான் ஒரே வழித்தடம். ஆனால் போர் காரணமாக அது மூடப்பட்டுவிட்டது. எனவே இந்தியா மாற்று ஆதாரங்களில் இருந்து தான் எல்பிஜி வாங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+