இந்திய மக்கள் சமையலுக்காகப் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டரின் விலை நாட்டின் பல நகரங்களில் 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை கொல்கத்தாவில் அதிகப்படியாக 670 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
தற்போது ஏற்பட்டு உள்ள விலை மாற்றம் மூலம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நாட்டின் அனைத்து முன்னணி நகரங்களிலும் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யும்.
இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட்
நாட்டின் மிகப்பெரிய பெட்ரோல் மற்றும் டீசல் ரீடைல் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் உடையை எல்பிஜி பிராண்டான இன்டேன்-ன் வீட்டில் பயன்படுத்தக்கூடிய 14.2 கிலோ சிலிண்டரும் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தும் சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.
எல்பிஜி சிலிண்டரின் விலை
ஒவ்வொரு மாத துவக்கத்திலும் சர்வதேச சந்தை மற்றும் உற்பத்தி செலவுகளை அடிப்படையாகக் கொண்டு எல்பிஜி சிலிண்டரின் விலை அறிவிக்கப்படும். இந்த வகையில் நவம்பர் 1ஆம் தேதி இன்டேன் நிறுவனம் தனது எல்பிஜி விலையில் எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.
5 மாதம்
தொடர்ந்து 5 மாதங்களாக எல்பிஐி விலை மாறுபடாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், எப்போதும் இல்லாத வகையில் தற்போது மாதத்தின் நடுவில் எல்பிஜி சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது இன்டேன்.
50 ரூபாய் உயர்வு
முன்பு வீட்டில் பயன்படுத்தும் 14.2 கிலோ சிலிண்டர் விலை டெல்லியில் 594 ரூபாயாகவும், கொல்கத்தாவிலும் 620.50 ரூபாயாகவும், மும்பையில் 594 ரூபாயாகவும், சென்னையில் 610 ரூபாயாகவும் இருந்தது.
தற்போது புதுப்பிக்கப்பட்ட புதிய விலையின் படி 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு மும்பை 644 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 670 வரையில் சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
கமர்சியல் சிலிண்டர்
இதேபோல் 5 கிலோ கமர்சியல் சிலிண்டரின் விலை 18 ரூபாயும், ஹோட்டல் மற்றும் இதர வர்த்தக இடங்களில் பயன்படுத்தும் 19 கிலோ சிலிண்டரின் விலை 36.50 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
சென்லையில் அதிகப்படியான விலை
இதனால் 19 கிலோ கமர்சியல் சிலிண்டரின் விலை டெல்லியில் 19 கிலோ சிலிண்டரின் விலை 1296 ரூபாயாகவும், மும்பையில் 1244 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1351 ரூபாயாகவும், சென்னையில் உச்சகட்டமாக 1,410.50 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வருடத்திற்கு 12 சிலிண்டர்
இந்திய குடும்பங்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர் மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும், 12 சிலிண்டர் புக் செய்து மானிய விலைக்கு வாங்கிய பின்பு ஆர்டர் செய்யும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் தற்போது குறிப்பிடப்பட்ட விலையைக் கொடுத்துத் தான் வாங்க முடியும்.
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைப் போல் தற்போது எல்பிஐ சிலிண்டர் விலையும் உயரத் துவங்கியுள்ளது. அதுவும் எப்போதும் இல்லாத வரையில் மாதத்தின் நடுவில் அதுவும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
நகரங்கள் வாரியான விலை நிலவரம்
- டெல்லி - ₹644.00
- மும்பை - ₹644.00
- குர்கான் - ₹653.00
- பெங்களூரு - ₹647.00
- சண்டிகர் - ₹653.50
- ஜெய்ப்பூர் - ₹648.00
- பாட்னா - ₹734.00
- கொல்கத்தா - ₹670.50
- சென்னை - ₹660.50
- நொய்டா - ₹610.50
- புவனேஷ்வர் - ₹621.50
- ஹைதராபாத் - ₹660.00
- லக்னோ - ₹682.00
- திருவனந்தபுரம் - ₹653.50
More From GoodReturns

முதல்ல ஹோட்டல்.. இப்போ ஆட்டோ..!! முடங்கும் மெட்ரோ நகரங்கள்.!! கொரோனா காலத்தை விட மோசம்!!

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகத்தில் சிக்கலா? IRCTC வெளியிட்ட புது அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

இந்தியாவில் LPG தட்டுப்பாடு தீவிரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்..!

அதிகரிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு: கடைவீதிகளில் தேடி தேடி இந்த பொருளை வாங்கும் மக்கள்!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!



Click it and Unblock the Notifications