சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் மற்றும் 19 கிலோ வணிகச் சிலிண்டர்களின் விலைகள் மார்ச் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் தான் சிலிண்டர் சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலை மற்றும் இயக்க செலவுகளை அடிப்படையாகக் கொண்டு சிலிண்டர் விலையை மாற்றும்.
இந்த வகையில் மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ திரவப் பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) மற்றும் 19 கிலோ வணிகச் சிலிண்டர்களின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்குச் சிலிண்டர் விலை உயர்வு கூடுதல் நிதிச் சுமையாக மாறியுள்ளது.
சென்னை
இன்று முதல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தும், வணிக நுகர்வோர் பயன்படுத்தும் சிலிண்டருக்கு 350.50 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில், வீட்டுச் சமையலறைகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் புதிய விலை சிலிண்டருக்கு 1,118.50 ரூபாயாகவும், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வணிகச் சிலிண்டர் ஒன்று 2,268 ரூபாய் விலையில் விற்கப்பட உள்ளது.
டெல்லி
இதேபோல் நாட்டின் தலைநகரான டெல்லியில் வீட்டுச் சமையலறைகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் புதிய விலை சிலிண்டருக்கு 1,103 ரூபாயாகவும், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வணிகச் சிலிண்டர் ஒன்று 2,119.50 ரூபாய் விலையில் விற்கப்பட உள்ளது.
முன்பு டெல்லியில் 14.2 கிலோ LPG சிலிண்டர் விலை 1053 ரூபாயாக இருந்தது.
வரி
எல்பிஜி சிலிண்டர் விற்பனை விலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். பொதுவாக விலை மாற்றம் என்பது மாநில அரசுகளின் வரி விதிப்பு வாயிலாக அதிகளவில் மாறுபடும். ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு பின்பு மாநில அரசுக்கான வரி வருவாய் ஈட்டும் வழிகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
12 சிலிண்டர்
ஒரு வருடத்திற்கு ஒரு வீட்டிற்கு மானிய விலையில் 12 14.2 கிலோ சிலிண்டரை பெற முடியும். கூடுதலாக வாங்க வேண்டும் என்றால் மானியம் இல்லாமல் அதாவது மேலே குறிப்பிட்டு உள்ள விலை நிலைகளை தாண்டி கூடுதல் தொகைக்கு வாங்க வேண்டியிருக்கும். மத்திய அரசின் PAHAL திட்டத்தின் படி மானிய தொகை உரிய நபரின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படும். இந்த மானிய தொகை வழங்குவதில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? இருக்கவே இருக்கு மினி எல்பிஜி!! அதுவும் 5 நிமிஷத்துல கிடைக்கும்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications