அக்டோபர் 1-ஆம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படும் என்று ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (OMCs) அறிவித்துள்ளன. வெளியான தகவல்களின்படி, 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் LPG எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.48.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட விலையின் காரணமாக ரெஸ்டாரண்டுகள், ஹோட்டல்கள் மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கு கமர்சியல் சிலிண்டர்களை பயன்படுத்தும் பிற வணிக நிறுவனங்களும் பாதிக்கப்படும். ஆனால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. இது எல்பிஜி சிலிண்டரை தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது.

செப்டம்பர் மாத எல்பிஜி விலை உயர்வு எவ்வளவு?: கடந்த செப்டம்பர் மாதமும், OMC நிறுவனங்கள் 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 39 உயர்த்தின. இதைத் தொடர்ந்து, 19 கிலோ கமர்சியல் எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை செப்டம்பர் 30 வரை ரூ.1691.50-ஆக இருந்தது. இதில் தற்போது 48.50 ரூபாய் உயர்ந்துள்ளது.
முக்கிய நகரங்களில் கமர்சியல் எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலை:
டெல்லி: தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1740 ஆக இருக்கும்.
கொல்கத்தா: கொல்கத்தாவில் 19 கிலோ எடை கொண்ட கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1850.50 ஆக இருக்கும்.
மும்பை: மும்பையில் 19 கிலோ எடை கொண்ட கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1692.50 ஆக இருக்கும்.
சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1903 ஆக உள்ளது.
விமான நிறுவனங்களுக்கான ATF விலை:
டெல்லி: ரூ 87,597.22
கொல்கத்தா: ரூ.90,610.80
மும்பை: ரூ.81,866.13
சென்னை: ரூ.90,964.43
தற்போது கமர்சியல் சிலிண்டரின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றம் அந்தந்த கடைக்காரர்களை மட்டுமின்றி நுகர்வோரையும் பாதிக்கும். கண்டிப்பாக விலை ஏற்றத்தின் காரணமாக முதலில் கடைகளின் உரிமையாளர் பாதிக்கப்படுவார். அதன் பிறகு உணவகங்கள் என்றால் உணவின் விலையை அதிகரித்து இந்த சிலிண்டரின் விலையை ஈடு செய்ய முயற்சிக்கலாம். இதன் காரணமாக நுகர்வோருக்கும் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதில் சற்று நிம்மதி அளிக்கும் விஷயம் என்னவென்றால் வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பது தான்.


Click it and Unblock the Notifications