கடந்த சில மாத காலமாக தொடர்ந்து சமையல் சிலிண்டரின் விலை (LPG Cylinder Price) சரிந்து கொண்டே வந்தது. ஆனால் இப்போது மீண்டும் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
ஏன் சமையல் சிலிண்டர்களின் விலை அதிகரித்து இருக்கிறது? எப்போதில் இருந்து இந்த விலை ஏற்றம் அமலுக்கு வருகிறது என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
அதோடு கடந்த காலங்களில் எப்போது சிலிண்டர் விலை அதிகமாக இருந்தது என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். சரி முதலில் தற்போதைய விலையில் இருந்து தொடங்குவோம்.
14.2 KG LPG cylinder Price
ஜூன் 01, 2020 முதல் இது தான் வீட்டு உபயோக, இண்டேன் கேஸ் சிலிண்டரின் புதிய விலை.
சென்னையில் மானியம் இல்லாத 14.2 கிலோ சமையல் சிலிண்டரின் விலை 606.50 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
மும்பையில் மானியம் இல்லாத 14.2 கிலோ சமையல் சிலிண்டரின் விலை 590.50 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
டெல்லியில், மானியம் இல்லாத 14.2 கிலோ சமையல் சிலிண்டரின் விலை 593.00 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
கொல்கத்தாவில், மானியம் இல்லாத 14.2 கிலோ சமையல் சிலிண்டரின் விலை 616.00 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
உச்ச விலை - சென்னை மட்டும்
கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால், பிப்ரவரி 2020-ல் தான், சென்னையில் 14.2 கிலோ, வீட்டு உபயோக சிலிண்டர் விலை 881 ரூபாயைத் தொட்டது. அதன் பிறகு தொடர்ந்து விலை சரிவு தான். கடைசியாக மே 2020-ல் 569 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது மீண்டும் ஜூன் 01 முதல், 14.2 கிலோ சிலிண்டர் 606 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
காரணம் என்ன
சர்வதேச அளவில் மெல்ல அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்றவைகளின் மாற்றத்தால் தான் விலை அதிகரித்து இருக்கிறார்களாம். ஆகையால் தான் வீட்டு உபயோக மற்றும் வணிக உபயோக சமையல் சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை அதிகரித்து இருக்கிறார்களாம்.
எவ்வளவு ரூபாய்
நம் சென்னை வாசிகள், மே 2020-ல் ஒரு 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு 569 ரூபாய் செலுத்தி வந்தார்கள். இனி அதே 14.2 கிலோ சிலிண்டருக்கு ஜூன் 2020-ல் 606 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம். ஆக ஒரு சிலிண்டருக்கு 37 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது.
வணிக பயன்பாடு
அதே போல தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை, சென்னையில் 1,254 ரூபாயாக அதிகரித்து இருக்கிறார்கள். மே 2020-ல் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 1,144 ரூபாயாக இருந்தது. ஆக ஒரு சிலிண்டருக்கு 110 ரூபாய் விலையை அதிகரித்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications