மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை சிலிண்டருக்கு 7 ரூபாய் உயர்த்தியுள்ளன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை விலைக்கும், உற்பத்தி மற்றும் பணி செலவுகளை கணக்கிட்டு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக தற்போது கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கமர்சியல் சிலிண்டர்களின் விலையை 7 ரூபாய் உயர்த்தியுள்ளது. ஆனால் வீட்டில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.

இன்றைய விலை உயர்வின் மூலம் தலைநகர் டெல்லி-யில், 19 கிலோ கமர்சியல் எல்பிஜி சிலிண்டரின் ரீடைல் விற்பனை விலை 1,773 ரூபாயில் இருந்து 1,780 ரூபாயாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ஜூலை 1 ஆம் தேதி புதிய விலை மாற்றத்தை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கும், ஆனால் இந்த முறை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கமர்சியல் எல்பிஜி சிலிண்டரின் விலையை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் 91.50 ரூபாயும் ஜூன் மாதம் 83 ரூபாயும், மே மாதம் 172 ரூபாயும் குறைத்தது. இந்த 3 மாத விலை குறைப்பிற்கு பின்பு தற்போது எல்பிஜி சிலிண்டரின் விலை 7 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்புதிய விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய விலை உயர்வின் மூஸம் டெல்லியில் 19 கிலோ கமர்சியல் எல்பிஜி சிலிண்டரின் விலை 1780 ரூபாயும், கொல்கத்தாவில் 1902 ரூபாயும், மும்பையில் 1740 ரூபாயும், சென்னையில் 1952 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications