இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தைகள் அனைத்தும் இதை பெரிய அளவில் நம்பியுள்ளது. ஆனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் வகையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த மோசமான சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலையை 15 ரூபாய் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவது மிகவும் இயல்பான ஒன்று என்பது இது அனைவருக்கும் தெரியும். ஆயினும் இந்த காலக்கட்டத்தில் சமையல் சிலிண்டர் விலையை அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சவுதி அரேபியா
சவுதி அரேபியா விற்பனை செய்யும் எல்பிஐ விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது, மே மாதம் ஒரு மெட்ரிக் டன் எல்பிஜி விலை 483 டாலராக இருந்த நிலையில், அக்டோபர் மாதம் 797 டாலராக உயர்த்தியுள்ளது. இதன் வாயிலாகவே இந்தியாவில் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டரி விலையை உயர்த்தியுள்ளது.
பெட்ரோலியம் நிறுவனங்கள்
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பார்த் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்த விலை சுமையை ஏற்க முடியாத காரணத்தால் தற்போது சமையல் எரிவாயு விலையை 15 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதன் நேரடியாக சாமானிய மக்களையே பாதிக்கும் வகையில் உள்ளது. மேலும் சமையல் எரிவாயு விலை உயர்வு அடுத்த சில மாதங்களுக்கும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை விலை
இன்றைய விலை உயர்வின் மூலம் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு சமையல் சிலிண்டர் விலை 899 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் 915.50 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மும்பையில் 899 ரூபாய், பெங்களூரில் 902.5 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி
மேலும் இன்றைய சிலிண்டர் விலை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் டிவிட்டரில் இந்தியாவில் ஒரு வருடத்தில் சிலிண்டர் விலை சுமார் 305 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மோடி ஜி-க்கு நன்றி என தெரிவித்து. எப்போது, எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு ஒருபக்கம் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பை கொடுத்து வரும் வேளையில், மறுபுறம் சமையல் சிலிண்டர் விலையை அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்களின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
300 ரூபாய்
300 ரூபாய் என்பது பலருக்கு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எழை மக்களின் ஒரு வருமானம் கூட 300 ரூபாய் இல்லை என்பது உண்மை. இந்த சூழ்நிலையில் ஒரு சாமானிய குடும்பத்தால் 900 ரூபாய் செலவு செய்து எப்படி சிலிண்டர் வாங்கி உணவு சமைத்து சாப்பிட முடியும்.


Click it and Unblock the Notifications