ஈரான் போர் காரணமாக இந்தியாவில் தொடக்கத்தில் மிகத் தீவிரமான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் முதலில் வணிக ரீதியிலான சமையல் எல்பிஜி கேஸ் விநியோகத்தை நிறுத்தி வைத்தன. இதனால் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. பல்வேறு உணவகங்களிலும் உணவுகளின் விலைகள் உயர்ந்துவிட்டன டீ காபி ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டு விட்டது.
மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காகவும் சிலிண்டர் பதுக்கலை தடுப்பதற்காகவும் பல்வேறு விதிமுறைகளை அறிவித்தது. குறிப்பாக சிலிண்டர் டெலிவரி செய்யக்கூடிய ஏஜென்ட்கள் அவற்றை சரியாக வாடிக்கையாளரிடம் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதுமே ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தும் சீராகவில்லை. எனவே பொதுமக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருக்கிறார். தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும், முடிந்த வரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும், வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும், பொது போக்குவரத்தான அரசு பேருந்து, மெட்ரோ, ரயில்களை பயன்படுத்த வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சூழலில் இண்டேன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹெச்பி ஆகிய சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வழங்கி இருக்கின்றன. தற்போது இந்தியாவில் ஓடிபி அடிப்படையில் தான் சிலிண்டர் டெலிவரி நடைபெறுகிறது. இதனை Delivery authentication code என அழைக்கிறார்கள். அதாவது வாடிக்கையாளராகிய நாம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது நம்முடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டது செய்யப்பட்டதற்கான ஒரு மெசேஜும் அதோடு சேர்த்து நான்கு இலக்கம் கொண்ட ஒரு ஓடிபி எண்ணும் வரும். இந்த நான்கு இலக்கம் கொண்ட ஓடிபி தான் டெலிவரி அங்கீகாரக் குறியீடு என அழைக்கிறார்கள்.
சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் இந்த நான்கு இலக்க otp யை கொடுத்தால் தான் சிலிண்டர் டெலிவரி செய்யக்கூடிய நிறுவனம் உங்களிடம் சிலிண்டரையே ஒப்படைக்கும். அப்போதுதான் அந்த சிஸ்டமில் நீங்கள் புக் செய்த சிலிண்டர் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்படும். வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் சரியாக சென்று சேர்ப்பதை உறுதி செய்யவும் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த ஒடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி நாடு முழுவதும் 100% விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஓடிபி வைத்து ஒரு மோசடி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அதாவது ஹெச்பி நிறுவனம் VM-HPGASc-S என்ற பெயரில் வரக்கூடிய ஓடிபி தான் நாங்கள் உண்மையாக அனுப்பக்கூடிய ஒடிபி. வேறு பெயரில் ஓடிபி வருகிறது உங்களை தொலைபேசி வாயிலாக அழைத்து நல்லது வாட்ஸ் அப் வாயிலாக மெசேஜ் செய்து ஓடிபி கொடுங்கள் என கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள் அது மோசடியாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் மட்டுமே நீங்கள் ஓடிபி தர வேண்டும் . மொபைல் போனில் வாட்ஸ் அப்பில், மெசேஜ் வாயிலாகவோ யாரிடமும் அதனை பகிரக்கூடாது என ஹெச்பி நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோன்ற ஒரு பதிவை தான் பாரத் பெட்ரோலியமும் வழங்கி இருக்கிறது. பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் ஓடிபி ஸ்கேம்களில் சிக்கி கொள்ள கூடாது, சிலிண்டர் டெலிவரி பெறும் போது மட்டுமே உங்களுடைய ஒடிபி-ஐ பகிர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
இண்டேன் நிறுவனம் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் டெலிவரி சமயத்தில் மட்டுமே உங்களுக்கு அனுப்பி வைக்கப்படக்கூடிய 6 இலக்க ஓடிபி-ஐ பகிர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் எனர்ஜி லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சொல்லப்படுவதால் மக்கள் சிலிண்டர் ஓடிபி மோசடிகளில் சிக்காம்ல் தற்காத்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications

