தமிழ்நாடு மக்கள் மட்டும் அல்லாமல் இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று, அதாவது ஜூலை 1, 2024 காலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சப்ளை செய்யும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள LPG சிலிண்டர் விலை ரூ.30 வரை குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த கமர்சியல் சிலிண்டர்கள் உணவகங்கள், ஹோட்டல்கள், மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் பெரிய வகை சிலிண்டராகும். ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது வருத்தமான செய்தியாக உள்ளது.

மத்திய அரசு 2025ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அடுத்த சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள வேளையில் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த புதிய விலை மாற்றத்திற்குப் பின்பு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை விபரம்:
டெல்லி - ரூ.1646 (முந்தைய விலை: ரூ.1676)
கொல்கத்தா - ரூ.1756 (முந்தைய விலை: ரூ.1787)
மும்பை - ரூ.1598 (முந்தைய விலை: ரூ.1629)
சென்னை - ரூ.1809 (முந்தைய விலை: ரூ.1840.50)
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் மாற்றமில்லை என்பதால் டெல்லியில் ரூ.803 ஆகவும், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.603 ஆகவும் தொடர்ந்து இந்த மாதமும் விற்பனை செய்யப்படும். இதேபோல் கொல்கத்தா - ரூ.829, மும்பை - ரூ.802.50, சென்னை - ரூ.818.50 விலைகளில் தொடரும்.
ஜூன் 1 ஆம் தேதி, வணிக சிலிண்டர் விலை ரூ.72 வரை குறைக்கப்பட்டது,
மே 1 ஆம் தேதி, வணிக சிலிண்டர் விலை ரூ.19 வரை குறைத்தன. இப்படி தொடர்ந்து 3 மாதமாக வணிக சிலிண்டர் விலை குறைந்து வரும் காரணத்தால் இதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை..?
வணிக கேஸ் சிலிண்டர்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், தொழிற்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விலை குறைப்பு மூலம் இப்பிரிவு நிறுவனங்களின் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும். இதன் மூலம், கணிசமான லாபத்தை ஈட்ட வழிவகுக்கும்.
மறுபுறம், இந்த விலை குறைப்பு காரணமாக உற்பத்தி பொருட்களில் ஏற்படும் விலை உயர்வை சமாளிக்க முடியும். உதாரணமாக ஹோட்டல்கள் தற்போது காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் உணவுகளின் விலை உயர்த்தும் நிலையில் உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சிலிண்டர் விலை குறைப்பு இந்த விலை உயர்வை தடுக்க வாய்ப்பு உள்ளது.
இதேபோல் தொழிற்துறையிலும் சிலிண்டர் பயன்படுத்தும் இடங்கள் அனைத்திலும் சேவை கட்டணம் குறையவோ அல்லது உரிமையாளர்கள் கூடுதல் லாபம் பார்க்க முடியம். இதன் மூலம் மறுமுதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம்.
More From GoodReturns

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? இருக்கவே இருக்கு மினி எல்பிஜி!! அதுவும் 5 நிமிஷத்துல கிடைக்கும்!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications