7 ஆண்டுகளில் இருமடங்கு சிலிண்டர் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் டீசல் வரி வசூல் 459% அதிகரிப்பு..!

சமையல் எரிவாயு விலையானது கடந்த ஏழு ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளது. இதே பெட்ரோல், டீசல் மீதான வரி வசூல் 459% அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எழுத்துபூர்வமாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் 14.2 கிலோ எடையுள்ள சமையர் எரிவாயு சிலிண்டரின் விலையானது 410.50 ரூபாயாக இருந்தது.இது டிசம்பர் 2020ல் கூட 594 ரூபாயாகத் தான் இருந்தது.

தற்போது அதன் விலையானது 819 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்தம் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் பொது வி நியோகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணை விலைலிட்டருக்கு 14.96 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் அதன் விலை லிட்டருக்கு 35.35 ரூபாயாக உள்ளது.

இருமடங்கு அதிகரித்த சிலிண்டர் விலை

இருமடங்கு அதிகரித்த சிலிண்டர் விலை

கடந்த இரண்டு ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை, பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணய் விலை ஆகியவற்றின் விலையானது சிறிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தியுள்ளது. இதே பெட்ரோல், டீசல் விலையானது அவ்வப்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ரூபாயின் மதிப்பு, வரி விகிதம், பெட்ரோல், டீசல் விநியோக கட்டணம், இதர கட்டணங்கள் என அனைத்தும் சேர்த்து எண்ணெய் நிறுவனங்கள் விலையினை நிர்ணயிக்கின்றன. குறிப்பாக அதன் சில்லறை வர்த்தகத்தில் அதிகளவில் வரிகளும் சேர்ந்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் 52,537 கோடி ரூபாய் வரியானது வசூலானது.

வரி வசூல் அதிகரிப்பு

வரி வசூல் அதிகரிப்பு

இதே 2019 - 20ம் நிதியாண்டில் இந்த வரி வசூலானது 2.13 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த வரி வசூலானது நடப்பு நிதியாண்டில் 11 மாதங்களில் 2.94 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி வசூல் 459% அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 13.83 ரூபாயாக இருந்த வரி, இன்று பெட்ரோல் மீதான கலால் வரி 32.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே டீசல் மீதான வரி லிட்டருக்கு 31.80 ரூபாயாக விதிகப்பட்டுள்ளது.

கலால் வரி எவ்வளவு?

கலால் வரி எவ்வளவு?

கடந்த 2016 - 17ம் ஆண்டில் மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மூலம் மொத்தம் 2.37 லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வசூலானது. இது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் 3.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து வரி அதிகரிப்பு

தொடர்ந்து வரி அதிகரிப்பு

கடந்த நவம்பர் 2014 முதல்; ஜனவரி 2016 வரைய்லான காலகட்டத்தில் கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைந்த நிலையில், அதன் லாபத்தினை எடுத்துக் கொள்ள அரசு ஒன்பது கட்டங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை ஒன்பது முறை உயர்த்தியது. மொத்தத்தில் பெட்ரோல் வீதற்திற்கான வரி லிட்டருக்கு 11.77 ரூபாயாகவும், இதே டீசல் மீதான வரி 13.47 ரூபாயாகவும் 15 மாதங்களில் உயர்த்தப்பட்டது.

2020ல் மட்டும் இவ்வளவு வரி அதிகரிப்பா?

2020ல் மட்டும் இவ்வளவு வரி அதிகரிப்பா?

அக்டோபர் 2017ல் அரசாங்கம் கலால் வரியை 2 ரூபாயும், அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 1.50 ரூபாயும் குறைத்தது. ஆனால் இந்த கலால் வரியை மீண்டும் 2019 ஜூலையில் லிட்டருக்கு 2 ரூபாய் ஏற்றியது. இதே 2020 மார்ச் மாதத்தில் மீண்டும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இதே ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயாகவும், டீசலுக்கு 13 ரூபாயும் உயர்த்தியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+