சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் மாறுதலுக்கு ஏற்ப சிலிண்டரின் விலையை OMC நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அறிவிக்கும். அதன்படி தற்போது கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வணிக LPG சிலிண்டர்களின் விலையை OMC நிறுவனங்கள் 39 ரூபாய் உயர்த்தியுள்ளன. இதனால், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் டெல்லியில் ரீடைல் சந்தையில் சிலிண்டர்களின் விலை 1,691.50 ஆக உயர்ந்துள்ளது.
சமீப காலமாக தொடர்ந்து சிலிண்டர்களின் விலை குறைந்து வந்தது. அதன்படி மே மாதம் 19 ரூபாய் குறைக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் 69.50 ரூபாய் குறைக்கப்பட்டது. ஜூலையில் ஒரு சிலிண்டருக்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டது.

LPG விலையில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சர்வதேச எண்ணெய் விலை, வரிவிதிப்பு கொள்கைகள், தேவை விநியோகம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். சமீபத்திய விலை உயர்வுக்குப் பின்னால் உள்ள துல்லியமான காரணங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
சென்னையில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 1,817 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று முதல் 38 ரூபாய் அதிகரித்து 1855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல டெல்லியிலும் இந்த கமர்சியல் சிலிண்டர்களின் விலை 1646 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் 1598 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1756 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் உபயோகிக்கப்படும் சிலிண்டர்களின் விலையில் எந்தவித மாற்றமும் தற்போது வரை செய்யப்படவில்லை. அதனால் முன்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை என்னவாக இருந்ததோ அதே விலையில் தான் விற்கப்படுகிறது. அதன்படி 818.50 ரூபாய் என்ற விலையில் தான் வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் விற்பனையாகி வருகிறது.
ஹோட்டல் வைத்திருப்பவர்கள், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இந்த கமர்சியல் சிலிண்டரின் விலை ஏற்றம் சற்று கவலை அளித்தாலும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாறாமல் இருப்பது பலருக்கும் நிம்மதி அளிக்கும் ஒன்றாக மாறி உள்ளது.
LPG விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு, உணவகங்கள், ஹோட்டல்கள் முதல் சிறு தொழில்கள் வரையிலான பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களை பாதிக்கும். பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. இதனால் நுகர்வோரும் அதிகரித்து வரும் செலவுகளுடன் போராடிக் கொண்டிருக்கையில், இந்த சமீபத்திய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது ஒருவரின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications