LPG சிலிண்டர் புக்கிங் விதிகளில் திடீர் மாற்றம்: வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு காலம் மாறியது!!

இந்தியாவில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக ரீதியான பயன்பாடு என இரண்டு வகையான சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. இதில் வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும், கேஒய்சி முடித்திருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறிப்பாக ஈரான் போர் காரணமாக எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து மத்திய அரசு சிலிண்டர் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றங்களை அறிவித்தது. தற்போது நிலைமை சீராகி இருப்பதால் மீண்டும் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் விதிகளை மாற்றியுள்ளது.

LPG சிலிண்டர் புக்கிங் விதிகளில் திடீர் மாற்றம்: வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு காலம் மாறியது!!

மத்திய பெட்ரோலிய துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார். மேற்காசிய போா் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டது. இதன் காரணமாக, உள்நாட்டில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. மார்ச் 12ஆம் தேதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துபவா்கள், பிஎன்ஜி எனப்படும் குழாய் வழி எரிவாயு விநியோக திட்டத்துக்கு மாற மத்திய அரசு அறிவுறுத்தியதோடு, சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கான கால இடைவெளியை அதிகரித்தது. அதாவது கிராமப்புறங்களில் வசிப்போர் 45 நாட்களுக்கு பின்னரே மீண்டும் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும் என கால இடைவெளி நீட்டிக்கப்பட்டது.

Also Read

தற்போது நகர்ப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாள்களாக உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் இந்த முன்பதிவு இடைவெளி தொடா்ந்து 45 நாள்களாக நீடித்துவந்தது. தற்போது, கிராமப்புறங்களிலும் முன்பதிவுக்கான கால இடைவெளி 45 நாள்களில் இருந்து 25 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி வெளியிட்ட பதிவில், சமையல் எரிவாயு விநியோக நிலைமை மேம்பட்டு வருவதால், அதன் முன்பதிவுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது தளா்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலண்டா் முன்பதிவுக்கான கால இடைவெளி நகா்ப்புறங்களுக்கு உள்ளதுபோல, கிராமப்புறங்களுக்கும் 25 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதுதொடா்பாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அனுப்பிய கடித நகலையும், தனது பதிவில் சுரேஷ் கோபி பகிா்ந்துள்ளாா்.

Recommended For You

எனவே இனி கிராமங்களில் வசிக்கும் மக்களும் சிலிண்டர் எடுத்த அடுத்த 25 நாள்களிலேயே புதிய சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய முடியும். இதுநாள் வரை இருந்த 45 நாள்கள் இடைவெளி என்பது பெரிய பெரிய குடும்பங்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எல்பிஜி தடைபட்டாலும் தற்போது அமெரிக்கா முக்கியமான எல்பிஜி சப்ளையராக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+