ஈரான் போர் நேரடியாகவே சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டு போயிருக்கிறது . இதனால் சிலிண்டர் விநியோகத்தில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் விநியோகங்களை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருக்கின்றன. எனவே சென்னை, பெங்களூர், மும்பை என பல்வேறு நகரங்களிலும் உணவகங்கள் இன்றிலிருந்து மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எல்பிஜி சிலிண்டர் விலை விநியோகத்தை நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக ஹோட்டல்களை மூடுவதாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த ஹோட்டல் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன.

திடீரென ஹோட்டல்கள் மூடப்படுவது நகரங்களில் வசிக்கக்கூடிய லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பேச்சுலர்கள் , உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய பலரும் இதன் காரணமாக பாதிக்கப்பட இருக்கின்றனர். சிலிண்டர் கிடைக்காத உணவகங்கள் மூடப்படும் நிலையில் கையிருப்பில் இருக்கும் சிலிண்டர்களை வைத்து சில உணவகங்கள் மட்டுமே செயல்படும் சூழல் உண்டாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தான் எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் விலையை திடீரென உயர்த்தின. 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையை 115 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. எண்ணெய் விநியோக நிறுவனங்கள் கடந்த 3 மாதங்களில் 193 ரூபாய் வரை வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை உயர்த்திவிட்டன. அது மட்டும் இல்லாமல் உணவகங்களுக்கு தள்ளுபடி விலையில் சிலிண்டர் சிலிண்டர் வழங்குவதையும் மார்ச் 1 முதல் நிறுத்தி கொண்டன. இதன் காரணமாக கள்ள சந்தையில் சிலிண்டர் டிமாண்ட் அதிகரித்திருக்கிறதாம்.

கடந்த வாரம் 2000 ரூபாய்க்கு கிடைத்த சிலிண்டர் இந்த வாரம் 3000 என விலை உயர்ந்துவிட்டதாம். சிலிண்டர் விலை உயர்வு, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள விலை சுமையை உணவக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்துவார்கள் என சொல்லப்படுகிறது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் , சில உணவகங்கள் தங்கள் கையிருப்பில் இருக்கக்கூடிய சிலிண்டர்களை வைத்து உணவு விற்பனை செய்கின்றன. சப்ளை குறைந்து டிமாண்ட் அதிகமாக இருப்பதால் பிரியாணி தொடங்கி பரோட்டா வரை பல்வேறு உணவுகளின் விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் 150 ரூபாய்க்கு விற்பனையாக கூடிய பிரியாணி விலை 200 ரூபாயாக விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற உணவுகளுக்கும் இதேதான் நிலை.
ஸ்விக்கி, சோமேட்டோ தளங்களிலும் available hotelகளின் எண்ணிக்கை குறையும். எனவே ஹோட்டல் உணவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட போகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை இன்னும் பத்து நாட்களுக்கு மேல் நீடிக்கும் பட்சத்தில் அடுத்ததாக டீ, காபி உள்ளிட்டவற்றின் விலையும் உயரும் வாய்ப்பிருக்கிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications