ஈரான் போர் காரணமாக இந்தியாவில் பெரிய அளவிலான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. செயல்படக்கூடிய சில குறிப்பிட்ட உணவகங்களிலும் உணவுகளின் பட்டியல்கள் குறைக்கப்பட்டு விட்டன.
பல்வேறு ஹாஸ்டல்கள் மற்றும் மெஸ்களில் குறிப்பிட்ட சில வகை உணவுகள் கிடைக்காது என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுவிட்டன. இது ஒருபுறம் இருக்க வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. எல்பிஜி தட்டுப்பாடு என்பது சிலிண்டரைத் தாண்டி மேலும் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது எல்பிஜி விநியோகத் தட்டுப்பாடு நீடிக்கும் போது மொபைல் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் போது இந்தியாவின் டெலிகாம் உள்கட்டமைப்பு பிரிவு பெரிய பாதிப்பை சந்திக்கும் என சொல்லப்படுகிறது.
எல்பிஜி தட்டுப்பாடால் டெலிகாம் நிறுவனங்களுக்கான டவர் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது நீடிக்கும் பட்சத்தில் நெட்வொர்க் விரிவாக்கம் தாமதமாகும் என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் மொபைல் டவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு மார்ச் 5ஆம் தேதி முதல் எல்பிஜி விநியோகத்தை நிறுத்திவிட்டன. இதனால் டவர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டவர் உற்பத்தியை நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் மற்றும் இண்டர்நெட் சேவைக்கு டவர்கள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த சூழலில் டவர் உற்பத்தி பாதிப்பு டெலிகாம் நிறுவனங்களின் நெட்வொர்க் மற்றும் சேவை விரிவாக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தற்போதைக்கு நாடு முழுவதும் மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் எல்பிஜி தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு அல்லது இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் பட்சத்தில் புதிய டெலிகாம் டவர்கள் உற்பத்தி செய்யப்படுவது நிறுவப்படுவதும். இதனால் இந்தியாவின் மொபைல் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் சேவை விரிவாக்கம் நின்று போகும்.
டெலிகாம் நிறுவனங்களுக்கான டவர் உற்பத்தியில் கால்வனைசேஷன் நடைமுறையில் எல்பிஜி பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஸ்டீல் டவர் கட்டமைப்புகள் நீண்ட காலம் நிலைத்து நிற்க இந்த நடைமுறை அவசியம். இதற்கு எல்பிஜி கட்டாயம் தேவை. ஆனால் அது கிடைக்காதது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இந்த அமைப்புகள் கடிதம் எழுதி இருக்கின்றன. மேலும் பல்வேறு மொபைல் டவர்கள் செயல்படுவதற்கு தடையின்றி மின்சார விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.செல்போன் நெட்வொர்க் பாதிப்பு இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இத்துறை சார்ந்த அமைப்புகள் டெலிகாம் டவர் தயாரிப்பாளர்களுக்கு எல்பிஜி விநியோகத்தில் முன்னுரிமை தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications