LPG சிலிண்டர் இணைப்பை PNG இணைப்பாக மாற்றினால் சலுகை: மத்திய அரசு அதிரடி..!!

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ளன. இதன் மூலம் தான் சமையலே செய்யப்படுகிறது. உஜ்வாலா போன்ற பல திட்டங்கள் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை கொண்டு சேர்த்துள்ளன.

அண்மையில் ஈரான் போர் காரணமாக நாட்டில் கடுமையான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சிலிண்டர் புக்கிங்கில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதே வேளையில் எல்பிஜி-க்கு மாற்றாக பிஎன்ஜி இணைப்புக்கு மாற மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். எல்பிஜிக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருப்பதால் தான் இந்த பிரச்சினை. இதுவே பிஎன்ஜி என்றால் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது எனவே அதன் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

LPG சிலிண்டர் இணைப்பை PNG இணைப்பாக மாற்றினால் சலுகை: மத்திய அரசு அதிரடி..!!

பிஎன்ஜி என்பது வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்வது ஆகும். மக்கள் தூய்மையான மற்றும் மலிவான சமையல் எரிபொருளை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் தற்போது சுமார் 1.74 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி இணைப்புகள் உள்ளன. இதனை இன்னும் விரிவாக்கம் செய்ய நகர்ப்புற எரிவாயு விநியோக (City Gas Distribution - CGD) நிறுவனங்கள் செயலற்ற நிலையில் அல்லது பில் செய்யப்படாமல் உள்ள இணைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், புதிய பகுதிகளுக்கு நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் ஊக்கத்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Incentive Scheme for Promotion of Domestic PNG Connections என்ற திட்டத்தின் கீழ், தகுதியான சிஜிடி நிறுவனங்கள் தங்களது எல்லை பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ஒவ்வொரு புதிய பில் செய்யப்பட்ட பிஎன்ஜி இணைப்புக்கும், கூடுதலாக 200 நிலையான கன மீட்டர் (SCM) உள்நாட்டில் உற்பத்தியாகும் குறைந்த விலை APM எரிவாயுவை பெற அந்த நிறுவனம் தகுதி பெறும். இந்த கூடுதல் எரிவாயு ஒதுக்கீடு மூலம், சிஜிடி நிறுவனங்கள் தங்களது சிஎன்ஜி போக்குவரத்து பிரிவிற்கு வாங்கும் விலையுயர்ந்த திரவ இயற்கை எரிவாயுவிற்கு பதிலாக இதை பயன்படுத்தி ஒட்டுமொத்த செலவை குறைக்கலாம்.

இந்த சேமிப்பு காரணமாக, PNG இணைப்புக்கான மூலதன செலவில் நிறுவனங்கள் கவனம் செலுத்த முடியும். இதனால் இந்த நிறுவனங்கள் கூடுதல் ஆர்வத்துடன் புதிய இணைப்புகளை வழங்கும். இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இரண்டு தவணைகளாக செயல்படுத்தப்படவுள்ளது.

எல்பிஜி சிலிண்டர்களை போல புக் செய்வது, சேமித்து வைப்பது அல்லது மாற்றுவது போன்ற சிரமங்கள் பிஎன்ஜி-இல் கிடையாது. நிலத்தடி குழாய்கள் மூலம் சீரான விநியோகம் இருக்கும். நம் சமையல் அறைக்கே இது வந்துவிடும். இத்துடன் மீட்டர் ஒன்றை பொருத்துவார்கள், அதில் எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை பொறுத்து மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.

எல்பிஜி சிலிண்டரை விட பிஎன்ஜி பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இது குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துவதால், வீட்டிலுள்ள காற்று தரத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கிறது. நாடு முழுவதும் பிஎன்ஜி பயன்பாட்டை விரைவுபடுத்த இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை 5 சதவீமாகக் குறைக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்காக National PNG Drive 2.0 இயக்கமும், புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கண்காணிக்கவும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் போர்ட்டலும் உருவாக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+