அமெரிக்கா ஈரான் இடையிலான போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படக் கூடிய எல்பிஜி-இல் 60 சதவீதத்திற்கும் அதிகமானது வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஈரான் போரால் கப்பல் போக்குவரத்து நின்று போனதால் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதன் காரணமாக சென்னை, பெங்களூர் , மும்பை என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் கிடைக்கவில்லை.

எனவே பெரும்பாலான நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக ஹோட்டல் உணவினை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களும் ஹோட்டல் தொழிலை நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களும் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பல்வேறு உணவகங்களும் சமையல் எரிவாய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தங்களுடைய உணவகங்களில் வெரைட்டியான உணவுகளை வழங்க முடியாது என்றும் குறிப்பிட்ட அளவிலான சில உணவுகளை மட்டுமே விநியோகம் செய்ய போவதாகவும் அறிவிப்பு பலகைகளையே வைத்திருக்கின்றன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் , பாரத் பெட்ரோலியம் என பல்வேறு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாகவே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டன. தற்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என சொல்லபடுகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் எஸ்மா சட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. Essential Services Maintenance Act - ESMA சட்டம், அதாவது அவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டத்தின் கீழ் வணிகர்கள் அல்லது தனி நபர்கள் சிலிண்டர்களை பதுக்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடலாம். சிலிண்டர் விநியோகச் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்தவும் சாமானிய மக்களுக்கு தடையில்லாமல் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இந்த சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி குறிப்பிட்ட துறைகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய முன்னுரிமை தரப்பட வேண்டும். வீட்டு உபயோக சிலிண்டர், குறிப்பாக குழாய் வழியாக வழங்கப்படும் எரிவாயு சப்ளை, போக்குவரத்துக்கான சிஎன்ஜி சப்ளை ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்படும்.
இந்தியாவில் 332 மில்லியன் எல்பிஜி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தடையின்றி சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தான் மத்திய அரசு எஸ்மா சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து குறிப்பிட்ட சில துறைகளுக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் அதாவது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய பொருள் என்ற பிரிவின் கீழ் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.
மத்திய அரசு எல்பிஜி உற்பத்தி , விநியோகம், சப்ளை, வர்த்தகம் உள்ளிட்டவற்றை கண்காணித்து ஒழுங்குபடுத்தக்கூடிய முழு அதிகாரமும் பெறுகிறது. இந்த சட்டத்தின் மூலம் செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவது தடுக்கப்படும் கள்ளச் சந்தை விற்பனை நிறுத்தப்படும். எண்ணெய் நிறுவனங்களும் எல்பிஜி உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதை அரசு இந்த சட்டத்தின் வாயிலாக உறுதி செய்கிறது.
More From GoodReturns

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications