இந்தியப் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் பெரும் பங்கீட்டைக் கொண்டு இருக்கும் ஐடி சேவைத் துறை 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்து பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.
இந்திய ஐடி சேவை துறையின் இந்த மந்தநிலை காரணமாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளது. இப்படியிருக்கையில் LTI Mindtree முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு ஐடி ஊழியர்களையும் பட்டதாரிகளையும் குஷிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலேயே வேகமாக வளரும் மாவட்டமாக விளங்கும் கோயம்புத்தூரில் தற்போது LTI Mindtree நிறுவனம் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதோடு ஏற்கனவே 200 ஊழியர்கள் கோயம்புத்தூர் LTI Mindtree நிறுவனத்தில் பணியாற்றி வரும் வேளையில்...
இப்புதிய விரிவாக்கத்தின் கீழ் LTI Mindtree சுமார் 800 ஊழியர்களைப் புதிதாகச் சேர்க்க உள்ளது, இதன் மூலம் கோயம்புத்தூர் LTI Mindtree நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர உள்ளது. கோயம்புத்தூரில் அலுவலகம் விரிவாக்கம் செய்யப்படும் காரணத்தால் பிற நகரங்களில் இருக்கும் ஐடி ஊழியர்கள் கோயம்புத்தூர் அலுவலகத்திற்கு மாற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

LTI என்பது நாட்டின் பிரபல கட்டுமான மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமான லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் டெக் சேவை பிரிவு, இது 1996ல் உருவாக்கப்பட்டது. ஜூன் 2019ல் எல் அண்ட் டி பிரபல ஐடி சேவை நிறுவனமான Mindtree-ஐ அதன் 82000 ஊழியர்கள் உடன் மொத்தமாகக் கைப்பற்றி நாட்டின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.
LTI Mindtree தற்போது சென்னையில் மணப்பாக்கம் மற்றும் தரமணி ராமானுஜன் ஐடி பார்க் ஆகியவற்றில் அலுவலகத்தைக் கொண்டு உள்ளது. தற்போது கோயம்புத்தூரில் 1000 ஊழியர்கள் பணியில் சேர்க்கும் வகையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பெரிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications